சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பெரம்பலூர், செப். 18- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் 800 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 96 பயனாளிகளுக்கு ரூ.10,22,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வ.கலையரசி தலைமையில், மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி முன்னிலையில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.