தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் உழைப்பாளி மக்களிடத்தில் வீடுவீடாக சென்று சந்தா சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்ட சந்தா ஒப்படைக்கும் நிகழ்வு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் 677 சந்தாவிற்கான தொகை ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அஐய்குமார், கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், என்.ஆறுச்சாமி, வி.சுரேஷ், என்.ஆர்.முருகேசன், வி.தெய்வேந்திரன், ஆர்.கோபால், வி.ஆர்.பழனிச்சாமி, தீக்கதிர் பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.