ஆய்வறிக்கை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்
கரூர், ஆக 1- அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு அறிக்கையை திருத்தமின்றி உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சதீஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, வாலிபர் சங்க மாநகரத் தலைவர் ராஜேந்திரபிரசாத், மாவட்டச் செயலாளர் சிவா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் ரஞ்சிதா நன்றி கூறினார். அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் யாசீன், ஒன்றியச் செயலாளர் தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.