ரிதன்யா குடும்பத்திற்கு நீதி கேட்டு போராட்டம்
மாதர் சங்கம் அறிவிப்பு
அவிநாசி, ஜூலை 1 - அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் விஷம் அருந்தி உயிரிழந்த ரிதன்யாவிற்கு நீதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தி னர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள னர். அவிநாசியில் ராமமூர்த்தி இல் லத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொது செயலாளர் அ. ராதிகா செய்தியா ளர்களிடம் பேசுகையில், ஜனநா யக மாதர் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம், குடும்பத்தினர் கூறுகையில், பல் வேறு அதிர்ச்சி தரும் தகவல் களை தெரிவித்தனர். வரதட்சணை கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வருகிறபோது உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரதட்சணை என்பது குற்ற செயல் என மக்கள் மத்தியில் சொல்ல வேண்டியது உள்ளது. வர தட்சணை என்பது குற்றம் என்று அரசு பிரச்சாரத்தை மக்களிடமும், கல்லூரிகளிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சாரத்தை மகளிர் நல துறையின் மூலமாக நடத்த வேண் டும். இது குறிப்பாக மேற்கு மாவட் டங்களில் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் வரதட் சணை கொடுமை நடந்து வருவ தைப் பார்க்கிறோம். உடனடியாக தமிழக அரசு இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். வர தட்சணை கொடுமை வழக்குகளில் தண்டனை என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் வரதட்சணை கொடுமை வழக்கு களில் 7.7 சதவீதம் மட்டுமே தண் டனை கிடைக்கிறது. இந்த வழக் கில் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர், மாமியார் இன்னும் கைது செய்யப்பட வில்லை, உடனடியாக மாமியாரை யும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலை யீடும் இருக்கக் கூடாது, பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காவல்துறை செயல்பாடு இருக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை தமி ழக அரசு ஊக்குவிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இரண் டொரு தினங்களில் மிகப்பெரிய அளவில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம், என தெரிவித்தார். இதில் ஜனநாயக மாதர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர், பானு மதி, மாவட்ட துணைத் தலைவர் கள், ஷகிலா, சாவித்திரி, மைதிலி, மாவட்டப் பொருளாளர் கவிதா, மாவட்ட துணைச் செயலாளர் லட் சுமி, செல்வி, ஒன்றியத் தலைவர் சித்ரா, ஒன்றியப் பொருளாளர் தங்க மணி உள்ளிட்டோர் உடன் இருந்த னர். முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறு தல் கூறினர்.