tamilnadu

img

ஆணவக்கொலையைகண்டித்துஆர்ப்பாட்டம்

ஆணவக்கொலையைகண்டித்துஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ராமச்சந்திரன் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,  அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சிறப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (அக்.18) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் வி.சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், செயலாளர் தீ.சந்துரு, பகுதிச் செயலாளர் ஏ.ராஜ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் நிரஞ்சனா உள்ளிட்டோர் பேசினர்.