tamilnadu

img

விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் பாதுகாப்பு அரண் - ஜி.மாதவன்

கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளில் செங்கொடி இயக்கம் போராடி வெற்றி பெற்றுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அமெரிக்கப் படை புழு தாக்குதலால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம்  கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ஊக்கத்தொகை எம்.ஆர்.கே கூட்டுறவு ஆலையில் மாநில அரசின் பரிந்துரை விலை லாபத்தில் பங்கு தொகை இஐடி பாரி சர்க்கரை ஆலையில் மாநில அரசின் பரிந்துரை விலையில் ஒரு பகுதி பெற்றுக் கொடுத்துள்ளோம் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறை கேடுகளுக்கு எதிராக போராடி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் முறைகேடு பணத்தை திரும்பப் பெறவும் செய்தோம்  விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து கடலூர் மடப்பட்டு சாலை திட்டம் மாற்றியமைக்கப்பட்டதோடு மூன்றாவது என்எல்சி சுரங்கத் திட்டத்தை கைவிட செய்தோம்.

வீராணம் ஏரியை தூர்வார ஒதுக்கப்பட்ட 42 கோடி ரூபாய் பாதி கூட செலவழிக்கப் படாமல் கிடப்பில் போடப்பட்டது சுதந்திரத்திற்கு பிறகு இன்று வரை பெருமாள் ஏரி தூர்வாரப்படாத நிலை உள்ளது. வெல்லிங்டன் ஏரி சீர்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படவில்லை. வெள்ள காலங்களில் தண்ணீரை வெளியேற்ற உருவாக்கப்பட்ட  அருவா மூக்கு திட்டம் முழுமையாக அமுலாக்க படவில்லை. நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ஒரு லட்சம் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது மஞ்சள் நோயாலும் அமெரிக்க படைப்புழுவாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது மாநில அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள் யானைப்பசிக்கு சோளப்பொரி ஆக உள்ளது கடலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 500 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளது விவசாயிகள் வட்டிக்கு கடனை வாங்கி கரும்பு உற்பத்தி செய்து அனுப்பிவிட்டு பணத்திற்கு காத்துக்கிடக்கும் அவல நிலை தொடர்கிறது. 700 கோடி பணத்தை தராமல் விவசாயிகள் பெயரில் வங்கியில் கடனை வாங்கிவிட்டு அம்பிகா ஆருரான் நிர்வாகம் ஆலையை மூடி விட்டது

முன்னால் அதிமுக ஆட்சி காலத்தில் மாநில அரசு அறிவித்த ஆதார விலை தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் தராமல் விவசாயிகளை வஞ்சித்தது. கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி ஒன்றிய அரசு  அனுப்பாதால் கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாடுகள் ஆடுகள் இறந்துள்ளது இருக்கும் ஆடு மாடுகளை காப்பாற்ற வேண்டும். ஒன்றிய அரசின் தவறான விவசாயம் கொள்கையினால் உரத்திற்கான மானியத்தை வெட்டியதால் கடந்த ஆறு மாதங்களாக கூட்டுறவு வங்கிகளில் யூரியா டிஏபி பொட்டாசியம் சல்பேட் ஜிப்சம் உள்ளிட்ட உரங்கள் இல்லாமல் விநியோகம் செய்யாமல் வெளிமார்க்கெட்டில் கொள்ளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. நாகப்பட்டினம்-விழுப்புரம் சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகளுக்கு  இழப்பீடு வழங்காமல் வஞ்சிக்கும் நிலை உள்ளது விவசாயிகளுடைய நியாயமான குரலை கூட மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. 50 ஆண்டு களுக்கு மேலாக குத்தகை பயிர் செய்யும்  விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கிறது. விவசாயம் அனைத்து பணிகளும் இயந்திரமாக மாறி வரக்கூடிய நிலையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை என்பது கனவாக மாறிவிடுகிறது வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில் பல ஊராட்சிகளில் பணி துவங்கவில்லை. கடந்த ஆண்டு 20 முதல் 30 நாட்கள் கூட வேலை வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த 150 நாள் வேலையும் 300 ரூபாய் கூலியும்  அமலாக்க வேண்டும் நகர்புற ஏழை எளிய மக்களுக்கு வாழ்க்கையை நடத்த வேலைவாய்ப்புத் திட்டத்தை விரிவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லிக்குப்பம் நகராட்சி கிள்ளை பேரூராட்சி இத்திட்டத்தை முறையாக அமுலாக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும். பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கும் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களை திரட்டி போராடி உரிமைகாக்க இம் மாநாட்டில்  சபதமேற்போம்.