tamilnadu

img

நிர்மலா தேவி ஜாமீனில் விடுவிப்பு!

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 11 மாதங்களுக்கு பிறகு, மார்ச் 12-ஆம் தேதியன்று அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது. ஆனால், ரத்த சொந்தங்கள் இரண்டு பேர் ஜாமீன் கையொப்பமிட வேண்டும் என்ற விதிமுறை இருந்த காரணத்தால், கடந்த ஒருவாரமாக சிக்கல் நீடித்தது. 


இதையடுத்து, நேற்று நிர்மலா தேவியின் சகோதரர் ரவியும், குடும்ப நண்பர் மாயாண்டியும் தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு, நிர்மலா தேவி இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், சிறையில் இருந்து வரும் நிர்மலா தேவி எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் எனவும், செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.