tamilnadu

img

சிறந்த வீரர்களுக்கு கால்நடைத்துறை பணியில் முன்னுரிமை!

சிறந்த வீரர்களுக்கு கால்நடைத்துறை பணியில் முன்னுரிமை!

மதுரை, ஜன.17- ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை  அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, கால்நடைப் பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வழிவகை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார்.  பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் கண்டுகளித்தார். உற்சாக வரவேற்பு  இதற்காக காலை 11.10 மணியள வில் அலங்காநல்லூரில் விழா மேடை க்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டா லினுக்கு, அமைச்சர் பி. மூர்த்தி பொன்  னாடை அணிவித்து வரவேற்றார். அமைச்  சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என். நேரு, மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன்,  தங்க. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், ஆ. வெங்கடேசன் எம்எல்ஏ உள்  ளிட்டோர் முதலமைச்சரை வரவேற்றனர்.  பரிசளிப்பு  அதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டுப் போட்டியில், வாடிவாசலில் சீறிப்  பாயும் காளைகளையும், காளையர் களின் வீரத்தையும் நேரில் கண்டு களித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்  திய காளைகளின் உரிமையாளர் களுக்கு தங்க மோதிரம் அணிவித்து கவு ரவப்படுத்தினார்.  2 அறிவிப்புகள்  நிறைவாக, தமிழர்களின் வீர விளை யாட்டை நேரில் பார்ப்பது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக பேசிய மு.க. ஸ்டா லின், இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “மதுரை மண் என்பது வீரம் விளைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட இந்த மண்ணின் வீரவிளையாட்டான உலகப்புகழ் பெற்றிருக்கக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்குகின்ற காளையர்களை பார்க்கின்றபோது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெரு மையாக இருக்கிறது” என்றார். தொடர்ந்து, “இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஜல்லிக்கட்டைப் பார்க்க முதலமைச்ச ராக வந்திருக்கக்கூடிய நான், ஏதா வது அறிவிப்புகளை வெளியிட்டுச் சென்றால் தான் உங்களுக்கும் திருப்தி, எனக்கும் திருப்தியாக இருக்கும். அத னால் இரண்டு அறிவிப்புகளை நான்  மகிழ்ச்சியோடு உங்களிடத்தில் அறி விக்க விரும்புகிறேன்” என்று கூறிய முத லமைச்சர், “பாரம்பரிய மிக்க ஜல்லிக் கட்டு போட்டிகளில் பங்குபெற்று, அதிக  காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்  கூடிய வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணி வழங்க  வழிவகை செய்யப்படும்; உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூர்  பகுதியில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்  றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய்  செலவில் அமைக்கப்படும் என்பதை யும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்  கிறேன் என்றார்.  அதனைத் தொடர்ந்து அலங்காநல்  லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவின ருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்  கும் முதலமைச்சர் சிறப்பு செய்தார். முன்னதாக, அலங்காநல்லூர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலைகளின் இருபுறங்களிலும் திரண்  டிருந்த மக்கள் வரவேற்பளித்தனர்.

சீறி வந்த காளைகளைப் பாய்ந்து அடக்கிய வீரர்கள்

19 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல் லூர் ஜல்லிக்கட்டு, சனிக்கிழ மையன்று வழக்கம் போல மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. 6,210 காளைகள் மற்றும் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்  கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தி ருந்த நிலையில், 1,153 காளைகள்  மற்றும் 933 மாடுபிடி வீரர்களுக்கு  ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்  கேற்க டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.  அதன்படி ஜல்லிக்கட்டு துவங்கு வதற்கு முன்பு, காலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடை பெற்றது. பரிசோதனைகளின் முடி வில் 495 மாடுபிடி வீரர்கள் போட்டி யில் பங்கேற்றனர். மது அருந்துதல், உடற்தகுதி குறைபாடு, வயது தகுதி, உடலில் காயம், ஆள் மாறாட்  டம் உள்ளிட்ட காரணங்களால் 60  வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட னர். இதேபோல் 1,007 காளைகள் மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டதில் 5 காளைகள் தகுதி நீக்கம்  செய்யப்பட்டு, 1,002 காளைகள் களம்  கண்டன. பின்னர் வீரர்கள் உறுதி மொழியேற்றனர். அதைத்தொட ர்ந்து கோட்டை முனியாண்டி கோவில்  வாடிவாசல் திடல் வழிபாட்டிற்குப் பின்னர், காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொட ங்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், சோழவந்தான் எம்.எல்.ஏ ஆ. வெங்க டேசன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அரவிந்த் மற்றும் அமைச்  சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்  டனர்.  முதலில் வாடிவாசலில் இருந்து, அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை, அரியமலை கங்  கையம்மன் கோவில் காளை, வலசை  தாய் கிராம கருப்பசாமி கோவில்  காளை ஆகிய மூன்று கோவில்  காளைகள் முதலில் அவிழ்க்கப் பட்டன. பின்னர் வாடிவாசலில் இருந்து சுற்றுவாரியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் சுற்றுக்கு 50 வீரர்  கள், 100 காளைகள் விகிதம் களமி றக்கப்பட்டனர். வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக் காசுகள்,  பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப்  பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 6.15 மணி வரை  நடைபெற்றது. இதில், மாடுபிடி வீரர்கள் 17 பேர், காளை உரிமையா ளர்கள் 12 பேர், காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேர், பெண் உட்பட 15 பார்வையாளர்கள் உட்பட  மொத்தம் 63 பேர் காயமடைந்த னர். இவர்களில் 21 பேர் மேல் சிகிச் சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். அலங்கா நல்லூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் காளீஸ்வரன், காளை குத்தியதில் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். நிறைவாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், 19 காளைகளை அடக்கி கருப்பாயூரணியைச் சேர்ந்த  கார்த்திக் முதலிடம் பிடித்தார். அவ ருக்கு கார் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபி சித்தர் 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார். வாகை குளம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 11 காளைகளை அடக்கி மூன்றாம்  இடம் பிடித்தார். இதில், அபி சித்தருக்கு இருசக்கர வாகனமும், ஸ்ரீதருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு காசோலையாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான முதல் இடத்தை, புதுக்கோட்டை கோவில் பட்டி பகுதியைச் சேர்ந்த ஏ.வி.எம்.  பாபு-வின் மாடு பெற்றது. மாட்டின் உரிமையாளர் ஏ.வி.எம். பாபு-விற்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் டிராக்டர், நாட்டின பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.  இரண்டாம் பரிசை வென்ற  ‘ராணா’ மாட்டின் உரிமையாளர் புதுக்கோட்டை கைக்குறிச்சி பகுதி யைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு இருசக்கர வாகனமும், மதுரையைச்  சேர்ந்த கென்னடி என்பவருக்குச்  சொந்தமான காளைக்கு மூன்றாம்  பரிசாக இ-பைக் வழங்கப்பட்டது. சிறப்பு பேருந்து வசதி, ஏற்பாடுகள் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள்  அலங்காநல்லூரில் குவிந்தனர்.  அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இஸ்ரேல், பெல்ஜியம், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 250 சுற்றுலாப் பய ணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தி யர்களும் உற்சாகத்துடன் கலந்து  கொண்டனர். அவர்கள், ஜல்லிக்கட்டு  நிகழ்வை மிகுந்த ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ  எடுத்து மகிழ்ந்தனர்.  இவர்களுக்காக, மதுரை சுற்றுலா  அலுவலகத்திலிருந்து அலங்கா நல்லூருக்கு காலை 8 மணியளவில்  அரசு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.