tamilnadu

கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் தருக!

சென்னை,அக்.17- விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாநிலம் முழுவதும் தீபாவளிக்கு கடந்த  ஆண்டை விட கூடுதலாக போனஸ்  வழங்க வேண்டும் என்று  விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன  கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாநில தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான்  மாநில பொதுச்செயலாளர் எம்.சந்தி ரன், பொருளாளர் அசோகன், திரு வள்ளூர் மாவட்ட சிஐடியு செயலாளர் கே. இராஜேந்திரன், பிருந்தாவனம் கே.ஜி. கணேசன் உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய மோடி அரசின் தவறான  கொள்கைகள் காரணமாக விசைத்தறி  தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு நலி வடைந்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். விசைத்தறி தொழிலாளர்கள் நாள்தோறும் 12 மணி நேரம் வேலை  செய்தும் வாழ முடியாமல் வட்டிக்கு கடன் வாங்கி அதனை திரும்ப கட்ட முடி யாமல் தற்கொலை செய்து கொள்வது  தொடர்கதையாக உள்ளது. சட்டப்படி யான சமூக பாதுகாப்பு இல்லாமல் தீவிர சுரண்டலுக்கு இந்த தொழி லாளர்கள் ஆளாகியுள்ளனர்.  தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலை, மாத ஊதியம் ரூ.26000 மற்றும்  சமூக பாதுகாப்பு அடையாள அட்டை  வழங்கவேண்டும், இலவச வீடுகள் கட்டி தர வேண்டும், மாவட்டங்களில் ஜவுளி சந்தைகள் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளது. உழைக்கும் மக்களின் உரிமை களை பறிக்கும் மோடி அரசை கண்டித்து வரும்  நவம்பர் மாதம் 26, 27, 28 ஆளுநர் மாளிகை முன்பு  அனைத்து மத்திய சங்கங்கள் மற்றும்  விவசாயிகள் அமைப்புக்கள் சார்பில்  நடைபெறும் போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என சம்மேள னத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.