எகிப்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ராமி ஷாத்தை விடுவிப்பதற்கான நடைமுறை வேலைகள் துவங்கியுள்ளன. அவர் விடுதலையானவுடன் பிரான்சுக்கு நாடு கடத்தப்படு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற அரசி யல் கைதிகளின் விடுதலைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் எகிப்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர் சதாத்தும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரு நிறு வனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரடியாக அலுவல கம் சென்று பணியாற்றவிருந்தனர். சிறப்பான இட மாக அலுவலகம் அமையப்போகிறது என்றெல்லாம் நிறுவனங்களும் ஒரு மாதத்திற்கு முன்பாக அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தன. ஆனால், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளதால் பெரும் பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வீட்டிலேயே இருந்து பணியாற்றுங்கள் என்று சொல்லி விட்டன.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் அவசர நிலையை நடைமுறைப்படுத்துவதாக அந் நாட்டின் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அறி வித்துள்ளார். எண்ணெய் வளம் அதிகமுள்ள கஜகஸ்தா னில் எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. மக்கள் இந்த விலை உயர்வுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். போராட்டத்தின் வீச்சைத் தாங்க முடியாமல் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியுள்ளது.