tamilnadu

img

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் நெகிழி குப்பைகள் அகற்றம்

நஞ்சராயன் குளம் பறவைகள்  சரணாலயத்தில் நெகிழி குப்பைகள் அகற்றம்

திருப்பூர், ஆக. 30 - திருப்பூர் அருகே ஊத்துக்குளி ஒன்றியம் ச.பெரியாபா ளையம் ஊராட்சி பகுதியில் உள்ள நஞ்சராயன் குளம் பறவை கள் சரணாலயத்தில் சனியன்று வனத்துறை சார்பில் நெகி ழிக்கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே இப்பணியைத் துவக்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், மாவட்ட ஊரக வளர்சசி  முகமை திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். சிக்கண்ணா கல்லூரி நாட்டு நலப்  பணித்திட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் நஞ்சராயன்  குளம் பகுதியில் நெகிழிக் கழிவுகுப்பைகளை சேகரித்து அகற் றினர்.