tamilnadu

img

மருந்தாளுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மருந்தாளுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூலை 25-  கடந்த ஜூலை 3 அன்று சுகாதாரத்துறை உத்தரவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையில் மருந்தாளுநர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கத்தின் வழியாக 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் என்ற உத்தரவு, எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கும்.  எனவே, முறையான பணி நியமனம் வழியாக காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நலன் கருதி காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.பிரேம்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்டப் பொருளாளர் எல்.பாலசுப்பிரமணியன், மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலாளர் எம். சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வ. கோபி, ஆய்வக நுட்பநர் சங்க தலைவர் ஆர். முத்துமாரி ஆகியோர் உரையாற்றினர்.  மாவட்ட பொருளாளர் வி.ஞானபாரதி நன்றி கூறினார்.  மயிலாடுதுறை  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மருந்தாளுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் என்.ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கணேசன், மருந்தாளுநர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் மணிவண்ணன், மாநில துணைத் தலைவர் பைரவநாதன், மாவட்ட பொருளாளர் சிவகாமசுந்தரி ஆகியோர் உரையாற்றினர்.  பெரம்பலூர்  பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கூத்தையன் தலைமை வகித்தார்.  மாவட்ட அமைப்பு செயலாளர் தூரிகை வேந்தன், பொறுப்பாளர்கள் அகமது உசைன், சிவசங்கர், ஏசுகிருஷ்ணன், ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சண்முகநாதன், மாநிலச் செயலாளர் சுகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், மருந்தாளுநர் சங்க பொறுப்பாளர் பரமசிவம், செல்வகுமார் உட்பட பலர் பேசினர்.  முன்னதாக பொறுப்பாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.