tamilnadu

img

குடிமனை கோரி மனு சேகரிக்கும் இயக்கம்

குடிமனை கோரி மனு சேகரிக்கும் இயக்கம்

மன்னார்குடி, ஜூலை 6 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய்  வட்டம் வாஞ்சியூர் கிராமத்தில் குடிமனை வேண்டி மனு சேகரிக்கும் இயக்கமும், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மக்கள் இணையும் விழாவும்   நடைபெற்றது.  ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் தலைமை வகித்தார். வாஞ்சியூர் இளங்கோ வர வேற்றார். முதற்கட்டமாக வாஞ்சியூர் பகுதியில் இருந்து 50 பேர் பல்வேறு அரசியல் கட்சிகளில்  இருந்து  விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்  மற்றும்  மாவட்டச் செயலாளர் டி.முருகையன் முன்னிலையில் இணைந்தனர். வாஞ்சியூர் கிராம மக்களின் மனைப் பட்டா கோரிக்கை மனுக் களை ஐ.வி.நாகராஜன் பெற்றுக் கொண்டார்.  விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, மன்னார்குடி நகரச் செயலாளர்  ஜி.தாயுமானவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி  மன்னார்குடி செயலாளர் ஜி.முத்துகிருஷ்ணன், எஸ்.சக்திவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.