tamilnadu

img

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள்

சென்னை,ஆக.7- கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திங்களன்று (ஆக.7) அமைதிப் பேரணி நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின்,ஓமந்தூரார் அர சினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலு த்தினார். அவரது நினை விடத்தில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான திமுக தொண்டர் கள் பங்கேற்றனர். அதேபோல், சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரம், சிஐடி கால னியில் உள்ள கலைஞரின் படத்திற்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். இந்நிகழ்வுகளில் திமுக பொருளாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனி மொழி  எம்.பி., தயாநிதி  மாறன் எம்.பி., அமைச்சர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, ஏ.வ.வேலு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.