tamilnadu

வெள்ள நிவாரணம் அறிவித்திடுக! முதல்வருக்கு பெ.சண்முகம் கோரிக்கை

கடலூர்,டிச. 2 - மழை வெள்ளத்தால் பாதிக் ்கப்பட்ட அனைத்து தரப்பின ருக்கும் நிவாரண தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் முதலமைச்சருக்கு பி.சண்மு கம் கோரிக்கை விடுத்தார். கடலூரில் செய்தியாளர் களை சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்  செயலாளர் பி.சண்முகம், “ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் ஒராண்டு காலமாக விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தால் அந்த சட்டங்களை திரும்பப்பெற குடியரசுத் தலைவரின் ஒப்புத லும் பெறப்பட்டுள்ளது. இது விவ சாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றார். பிரித்தாளும் சூழ்ச்சி விவசாயிகள் பொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான புதிய சட்டம், மின்சார திருத்த சட்ட மசோதா  திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட இரண்டு கோரிக்கை களை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என்றும்  இதுதொடர்பாக ஒன்றிய அரசு குறிப்பிட்ட சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளதால் விவசாய  சங்கத்தினரி டையே பிரிவி னையை தூண்ட முயற்சிக்கிறது என்றும் வருகிற 4 ஆம் தேதி அகில இந்திய விவசாய சங்க கூட்டத்தில் பேசி முடிவு எடுத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள் ்ளப்படும் என்றும் அவர் கூறி னார்

முதல்வர் ஆய்வு: வரவேற்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு  மாதமாக பெய்த கனமழை காரண மாக மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், உரிய  நடவடிக்கைகள் மேற்கொள் ்ளப்படும் என்று அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றும் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  தமிழகத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாய நிலங்கள் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பாதிப்படைந்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நிலத்தின்  பரப்பளவை அரசு மிகக்குறை வாக அறிவித்து வருகின்றனர். உண்மையான பாதிப்பை தெரியப்படுத்தாமல் அதிகாரிகள் ஏமாற்றி வருகின்றனர் எனவும் சண்முகம் தெரிவித்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 என்றும் மறு நடவு விவசாயிகள் செய்தால் ஏக்க ருக்கு 2,400 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மறு நடவு என்பது டெல்டா மாவட்டங்களில் ஏற்கக் கூடியதாக இல்லை. ஏனென்றால் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்படும். அப்போது டெல்டாவில் மறு நடவு செய்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். ஆகவே, விவசாயிகள் அதிருப்தியில் உள்ளதால் ஏக்கருக்கு ரூ. 20000  நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.