சென்னை, ஜூலை 5 - அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் முதல் மாநாடு சென்னையில் நடைபெறு கிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் நடத்துகிறது. இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் செவ்வாயன்று (ஜூலை 4) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: உலகம் முழுக்க வேலை நேரத்தில், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கவும், ஓய்வூதியத்தை குறைத்தும் வருகின்றனர். ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பெறும் சம்பளத்தின் உண்மையான மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. ஜெர்மனியில் ஒரு தொழி லாளி வாரத்தில் 2 நாள் விடு முறையில் 35 மணி நேரம் வேலை செய்து மாதம்3.50 லட்சம் ஊதியம் ஈட்டுகிறார். தமிழகத்தில் வாரம் ஒரு நாள் விடுமுறையுடன் 48 மணி நேரம் வேலை செய்தால் 30 ஆயிரம்தான் வழங்குகிறார்கள். மேற்கத் திய நாடுகளில் ஊதியத்தை குறைக்க முடியவில்லை என்றால் கம்பெனியில் (நிதி மூலதனம்) மூன்றாம் உலக நாடுகளுக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.உழைப்பின் விலையை குறைத்தால், உண்மை மதிப்பு வீழ்கிறது. ஓய்வு பெற்றவர்களை காக்க போராடிக் கொண்டி ருக்கிறோம். ஓய்வூதியம் மருத்துவத் தேவையைக் கூட ஈடுகட்டுவது இல்லை. தமிழ்நாட்டில் அரசு ஊழியர் களுக்கு உள்ளதுபோல் போக்குவரத்து ஓய்வூதியர் களுக்கு மருத்துவ காப்பீடு தர மறுக்கின்றனர்.
ஒரே நிறுவனத்தில் 3 விதமான ஓய்வூதியம் வழங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக ஏராள மான வழக்குகள் நீதிமன்றங் களில் உள்ளன. ஆட்சியாளர் களின் ஓய்வூதியம் பறிப்புக்கு எதிராக நாமும் போராடுகிறோம். ஐரோப்பா முழுவதும் இத்தகைய போராட்டம் நடக்கிறது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங் களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து வதை தடுக்க ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.கர்நாடகாவில் இலவச அரிசியை கொடுக்க முயற்சித்தால், ஒன்றிய அரசு இலவச அரிசியை பழைய விலைக்கு கூட தர மறுக்கிறது. ஊழலை ஒழிக்கி றோம் என்ற பெயரில் அரசி யலமைப்பு சட்டத்தை ஒழித்துக் கொண்டு இருக் கிறார்கள். அரசியல் சட்டம் தெரியாத நபர் தமிழ் நாட்டின் ஆளுநராக உள்ளார். பாஜக ஆளும் உ.பி., உத்தரகண்ட், மத்தியப்பிரதே சம் போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள், தொழி லாளர்கள் அச்ச சூழலில் உள்ளனர். மதக் கருத்துக் களை பரப்பி அச்சமூட்டி வைத்துள்ள நிலையையும் மீறிசெயல்பட வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் நடைபெறும் மாநாட்டை வலுவாக நடத்து வோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய அகில இந்திய மாநில அரசு ஓய்வூ தியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நெ.இல.சீதரன், “புரட்சி தினமான நவ.7 ஆம் தேதி சென்னை பெரியமேட்டில் உள்ள சால்வேஷன் ஆர்மி அரங்கில் மாநாடு நடை பெற உள்ளது” என்றார். இந்தக் கூட்டத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார், அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்தின் தலைவர் அசோக் தூல், நிதிச் செய லாளர் ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் ராகவேந்தி ரன், மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் எஸ்.ஜெகதீசன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ந.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். வரவேற்புக்குழு மாநாட்டுவரவேற்பு குழு தலைவராக அ.சவுந்தர ராசன், செயலாளராக பி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக ந.ஜெயச் சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.