திண்டுக்கல், டிச.29- ஆன்லைன் ரம்மி சூதாட்டத் திற்கு தடை விதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு பல மாதங் கள் ஆகிறது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநரின் இச்செயலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பலர் பணத்தை இழந்து தற் கொலை செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகி றது. இதன்பிறகும் ஆளுநர் கண்டுகொள்ளாமல், அரசியல் மற்றும் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இந்நிலையில் ஆன் லைன் ரம்மியால் மேலும் ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள கூத்தம் பூண்டி கிராமம் கருமாங்கிணற் றைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் அருண்குமார் (24). இவர் பி.காம். வரை படித்துள்ளார். இவரது தந்தை சங்கர் ஏற்கனவே இறந்து விட்டார். தாயார் விஜயலட்சுமி மற்றும் பாட்டி அத்தம்மாள் ஆகி யோரது பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். தாயார் வாங்கிக் கொடுத்த செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தில் விளையாடி ரூ.50 ஆயிரம் வரை பணத்தை இழந்தார். இதனால் தாய் மற்றும் பாட்டி, உறவினர்கள் அருண்குமாரை ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடாதே என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த நிலையில் இருந்த அருண்குமார் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடி யும் கிடைக்கவில்லை. இது குறித்து கள்ளிமந்தை யம் காவல்நிலையத்தில் தாயார் விஜயலட்சுமி புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கருமாங் கிணறு ஊர் பொதுக்கிணற்றில் அருண்குமாரின் உடல் மிதந் தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட் டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து அருண்குமா ரின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூராய்வுக்காக ஒட்டன்சத்தி ரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.