ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை
கோவை, ஆக.14- தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகள், விமான கட்டணங்கள் உயர்ந்து உள்ளதால், பயணிகள் கவலையடைந்து உள்ளனர். சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என வெள்ளிக்கிழமை முதல் தொடர் பொது விடுமுறையை முன்னிட்டு, கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத் துள்ளனர். தொடர் விடுமுறைகளை கருத்தில் கொண்டு முன்கூட்டியே ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பெரும்பாலானோர் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து விட்டனர். இத னால் பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்து கள் சேவைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதைக் கொண்டு தனி யார் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் கோவையிலிருந்து சென்னை செல்ல ரூ.800 முதல் ரூ.1000 வரை கட்ட ணம் உள்ள நிலையில், தொடர் விடுமுறை நாட்களில் ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்ட ணங்கள் வசூலிக்கப்படுகிறது. பெரும்பா லும் ஆன்லைனில் பயண சீட்டுகள் முன்ப திவு செய்யப்பட்டதாக காட்டிவிட்டு, இறுதி நேரத்தில் வரும் பயணிகளிடம் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வசூலிக்கும் சூழலும் ஏற்பட் டுள்ளது. இதேபோல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்து கட்டணமும் அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை நாட்களை மையப்ப டுத்தி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனி யார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். இதே போல் மூன்று நாட்கள் விடுமுறையை முன்னிட்டு விமான சேவைகளை பயன்படுத்தும் பயணி களும் அதிகளவு கட்டண உயர்வால் அதிர்ச்சி யடைந்துள்ளனர். சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, 12 ஆவது வார்டுக்குட்பட்ட உடையாம்பாளையத்தில், தாயுமானவர் திட்டம் தொடக்க நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சிபிஎம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, மாமன்றக்குழு தலைவர் வி.இராமமூர்த்தி, திமுக வட்டச் செயலாளர் சி.முத்துச்சாமி, சிபிஐ நிர்வாகி ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.