tamilnadu

img

நீரில் மூழ்கிய நெற்பயிரை அதிகாரிகள் ஆய்வு

நீரில் மூழ்கிய நெற்பயிரை அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் சங்கராபுரம் பகுதியில் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது குறித்து  வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வந்த கனமழையினால் குறிப்பாக சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் சௌந்தரவல்லி பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து விவசாயிகள் வேதனை அடைந்து வந்தனர். இது குறித்து  வேளாண்மை துறை அதிகாரி ஆனந்தன் தலைமையில் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்து வருகின்றனர்.