tamilnadu

img

யாரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது: முதலமைச்சர்

சென்னை,ஜூலை 7- எந்த ஒரு மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது என்று முதலமைச்சர் தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீ சுவரர் கற்பகாம்பாள் திரு மண மண்டபத்தில், இந்து  சமய அறநிலையத் துறை யின் திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று திரு மணம்நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், “எந்த மனிதரையும் சாதி யின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது” என்றார். தமிழ்நாட்டை முன்னு தாரணமாக கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உள்பட பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் அர்ச்சகர்களாகி இருக்கி றார்கள் என்றும் அவர் கூறி னார். சென்னை உயர்நீதி மன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டு மானாலும் அர்ச்சகர் ஆக லாம், அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருப் பதையும் முதலமைச்சர் சுட்டி க்காட்டினார். ‘கோவில் கூடாது என்ப தல்ல, அது கொடியவர் களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது’ என்று பராசக்தி திரை ப்படத்தில் அன்றைக்கு தலைவர் கருணாநிதி வசனம்  எழுதினார். அப்படி கோயில் களில் எந்த தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்ப தில் தலைவர் கருணாநிதி எந்த அளவுக்கு மிகுந்த எச்ச ரிக்கையுடனும் கவனத்து டனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்துள்ள திமுக அரசு அதே வழியை பின்பற்றிக் கொண்டிருக் கிறது என்றும் அவர் தெரிவித்தார்.