ஆவுடையார் கோவில் அருகே சகோதரர்கள் இரட்டை கொலை தேசிய பட்டியலின ஆணைய தலைவர் விசாரணை
அறந்தாங்கி, ஆக. 5- புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றியம், காம ராஜர் நகரைச் சேர்ந்தவர் காத்தமுத்து. இவரது மகன்கள் கண்ணன் மற்றும் கார்த்திக் இருவரும், கடந்த ஜூலை 24ஆம் தேதி, அப்பகு தியில் உள்ள திருமண மண்ட பம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, திங்க ளன்று சம்பவம் நடைபெற்ற பகுதியினை தேசிய பட்டிய லின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, ஆணைய தனிச் செயலாளர் கவரங் சாவ்தா, ஆணைய இயக்கு னர் டாக்டர் ரவிவர்மன், மாவட்ட ஆட்சியர் மு. அருணா, காவல்துறை தலை வர் சாமுண்டீஸ்வரி, துணை இயக்குனர் டாக்டர் ஸ்டா லின் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். தொடர் ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். விசாரணைக்குப் பின் கிஷோர் மக்வானா கூறுகை யில், “இந்த உயிரிழப்பு யாரால் ஏற்படுத்தப்பட்டது; அதற்கான காரணம் என்ன வென்று முழுமையாக தெரிந்தவுடன் குற்றம்செய்த வர்கள் அனைவருக்கும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இது போன்ற நிகழ்வு கள் இனிவரும் காலங்களில் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலு வலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது” என அவர் கூறி னார். இந்த ஆய்வின் போது, காவல்துறை கண்காணிப் பாளர் சண்மீட் செளர், மாவட்ட காவல்கண்காணிப் பாளர் அபிஷேக் குப்தா, ஊராட்சி அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர் உடன் இருந்தனர்.