tamilnadu

img

பட்டமளிப்பு விழா தேதி மட்டும் ஆளுநரிடம் கேட்க வேண்டும்

சென்னை, ஜூலை 22- பல்கலைக்கழக பணிகள் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று துணைவேந்தர்களிடம் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழக பதிவாளரை (பொறுப்பு) இருந்த ஜி.ரவிக்குமார் மாற்றப்பட்டு, எம்ஐடி கல்லூரியின் முதல்வர் ெஜ.பிரகாஷ் அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றத்தை துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பூதகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில் துணை வேந்தர் வேல்ராஜ் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலளிக்கையில், ‘‘ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்ப வரை பொறுப்பு பதிவாளராக ஏன் நியமிக்க வேண்டும்? எதன் அடிப்படையில் இந்த நியமனத்தை செய்தீர்கள்? இனி  இத்தகைய நிகழ்வுகள் நடக்கக் கூடாது. இனி அனைத்து பல்கலைக்கழகங்களும் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களை தனிக்குழு அமைத்து அதன் மூலம் தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார். அதேபோல் துணைவேந்தரின் கோரிக்கைக்கு பதி லளித்த அமைச்சர் பொன்முடி, ‘‘பல்கலை. பணிகளை ஆளுநரிடம் கேட்டுதான் துணைவேந்தர்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பட்டமளிப்பு விழாவிற் கான தேதியை மட்டும் ஆளுநரிடம் கேட்க வேண்டும். சிறப்பு  விருந்தினர் யார் என்பதை துணைவேந்தர்கள் முடிவு  செய்யலாம். அதேபோல், யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளை யும் பின்பற்றுவது கட்டாயமில்லை. நமது மாநிலத்தில் என்ன சூழல் நிலவுகிறது. அதற்கேற்பதான் செயல்பட வேண்டும்” என்றார்.