சென்னை, ஏப். 20- நம்ம நிதி, நம்ம பொறுப்பு என்ற முறையில், ஆளுநர் மாளிகைக்கு ரூ.5 கோடியை ரூ. 3 கோடியாக குறைத் துள்ளதாகவும், அதே நேரம் ஆளுநர் குறைசொல்லுமளவிற்கு நாங்கள் நடக்கவில்லை என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடை பெற்ற மாநில கோரிக்கை விவாதத் தின் போது பேசிய வேல்முருகன், ஆளு நருக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பினார். மேலும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஆளுநர் மாளி கைக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் சில விளக்கங் களை அளித்தார். அதன் விபரம் வருமாறு: சில அசாதாரண நிகழ்வாக அன் றைக்கு இருந்த ஆளுநரின் செயலர், நிதி செயலருக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். ஆளுநர்களின் செயல்பாடு களைச் சிறப்பிப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளனர். அதில், உடனடியாக செயல்படுத்தி விட்டீர்கள் என ஆதாரத்தை நீங்கள் கொடுத்தால் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள் ளார். அதனை முறையில்லா மிரட்டும் கடிதமாகவே கருதுகிறேன். ஜனநாயக நாட்டில் இதுவெல்லாம் எப்படி செல்லும்? என தெரியவில்லை. மேலும், ரூ. 5 கோடிக்கு எந்த காரண மும் சொல்லத் தேவையில்லை என்பது ஜனநாயகத்திற்குப்பட்டது அல்ல. நிலுவையிலிருந்தது ரூ.1,56,000. இந்த ஜனவரி மாதம் ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும் எனவும் நிதித்துறைச் செயல ருக்குக் கடிதம் அப்போது எழுதி யுள்ளார். கோப்பு உருவாக்காமல், நிதியமைச்சரிடம் கூறாமல், கொள்கை முடிவெடுக்காமல் நிதிச் செயலரே ரூ. 50,00,000 அதிகரித்து ஒரே கோப்பில் அன்று முடிவெடுக்கிறார். மார்ச் மாதத்திற்குள்ளாக அந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்த முடிய வில்லை. மீதமுள்ள பணத்தை மாளிகை கணக்கில் சேர்த்துள்ளார்.
அத்துடன், பொதுத்துறையின் கோப்புகளை எடுத்துப் பார்த்தால் கையெழுத்து, சீல் இல்லாமல் கடிதம் கொடுத்துள்ளார் அன்றைய ஆளுநரின் செயலாளர். அட்சயப்பாத் திராவுக்காக கட்டிடத்தைக் கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை. 2021இல் ஆர்.என்.ரவி ஆளுநராக வந்த பிறகு 17 கோப்புகள் கூடுதல் செலவுக்கோ, நிதிக்கோ கோப்புகள் உருவாக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. ‘பென்ஸ் கார்கள் வாங்குவதற்கு ரூ.2.10 கோடி, சுதந்திர தின விழா ரூ. 25 லட்சம், சுற்றுப்பயணம் ரூ.15 லட்சம், அமைச்சரவை பதவியேற்பு ரூ. 10 லட்சம், கிறிஸ்துமஸ் செலவிற்கு ரூ.25 லட்சம், குடியரசு விழாவிற்கு ரூ.20 லட்சம், புது பர்னிச்சர் என கொடுக்கப் பட்டுள்ளது. ஆளுநர் குறைசொல்லு மளவிற்கு நாங்கள் நடக்கவில்லை. வேறு எந்த மாநிலமும் தமிழ்நாடு போன்று ஆளுநருக்கான நிதியை உயர்த்தவில்லை. தணிக்கையில் குறை சொல்லாத அளவிற்கு நாம் செயல்படவேண்டும். அளித்த செலவு பண்ணாத பணத்தை அடுத்த ஆண்டு கேட்கக்கூடாது. அதனால் ரூ.5 கோடியை ரூ.3 கோடி யாகக் குறைத்துள்ளோம். நம்ம நிதி, நம்ம பொறுப்பு என்பதால் சிஏஜி தணிக்கை கோரியிருக்கிறோம். முதல மைச்சரின் கையெழுத்தைப் பெற்று நிதியை எப்படி செயல்படுத்த வேண்டும்? என அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுக்கவுள்ளோம். ஜன நாயக நாட்டில் மன்னர் இல்லை. எந்த விதிமுறையில் நிதி ஒதுக்கப்படு கிறதோ, அப்படி செலவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நீர் வளத் துறை அமைச்சர் துரை முருகன், “ஆளுநர் செலவினங்களில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. அது ஆளுநராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தப்பு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும் . இல்லை யெனில், அதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.