புதுதில்லி, டிச.3- இரயில்வே துறையை தனியார்மயம் ஆகாது என்று தெரிவித்துள்ள இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனியார் முத லீடுகள் வரவேற்கப்படும் என்று கூறியுள்ளார். இரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. இது ஒரு பெரிய நிறுவனம் மட்டுமல்ல மிகவும் சிக்கலான அமைப் பும் கூட இரயில்வே இந்தி யாவின் சொத்து. ஒவ்வொரு இந்தியரின் சொத்து. அது ஒருபோதும் தனியார்மய மாக்கப்படாது என்றார். ஆனால், இந்திய இரயில் வேயின் திறமையான செயல்பாட்டிற்கு தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் வைஷ் ணவ் கூறியுள்ளார். இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய அரசு நிறுவனமாகும். 64 ஆயிரம் கிமீ தூரத்திற்கு இருப்புப் பாதைகளைக் கொண்டுள்ள ரயில்வே தினசரி 13 ஆயிரம் பயணி கள் ரயில்களில் கிட்டத்தட்ட 23 மில்லியன் மக்களை ஏற்றிச் செல்கிறது.
ஏறக்குறைய 1.3 மில்லியன் தொழிலாளர்க ளுடன் இந்த அரசு நிறுவனம் செயல்படுகிறது. ஆனால், ரயில்வே அமைச்சகம். 109 வழித் தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக் கும் வகையில், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப் பிக்கலாம் என அழைப்பு விடு த்திருந்தது. 109 வழித்தடங்களில் 151 நவீன பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தனி யார் மயத்தின் இந்த முயற்சி யில் தனியார் ரயில்களை இயக்குபவர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய் வார்கள் எனக் கூறியி ருந்தது. கடந்த ஆண்டில் ஐஆர்சி டிசி ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. தனியார் ரயில்களில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்டும் 109 வழித்தடங்களும் 10 முதல் 12 குழுக்களாக பிரிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. ரயில்வே தனியார் மயம் இல்லை. ஆனால், தனியார் முதலீடுகள் வரவேற்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளது கொல்லைப்புறம் வழியாக ரயில்வேயை தனியார்மய மாக்கும் முயற்சி தான் இது என்று அரசியல் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.