tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில்  சட்டக் கூலி வழங்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை

திருவண்ணாமலை,ஜுலை 21- திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வட்டா ரம் இஞ்சிமேடு கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ். முனியம்மாள், சிபிஎம் இடைக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பெரணமல்லூர் சேகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சங்கத்தின் இஞ்சிமேடு கிளைத் தலைவராக ஆர். தீபா, செயலாளராக டி.லதா, பொருளாளராக ஆர்.ஜெயந்தி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் அனைத்து நாட்களிலும், சட்டக் கூலி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

மெட்ரோ ரயில் கார்டு பொது போக்குவரத்து  அட்டைக்கு மாற்றம்

சென்னை, ஜூலை 21- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் பயணிக்க மெட்ரோ ரயில் பயண அட்டையுடன் கூடுதலாக 2023 ஏப்ரல்  14 முதல் தேசிய பொது போக்கு வரத்து அட்டையை (என்சி எம்சி கார்டு - சிங்கார சென்னை அட்டை) அறிமுக ப்படுத்தியது.   வரும் ஆகஸ்ட் 1 ஆம்  தேதி  முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  தேசிய பொது போக்கு வரத்து அட்டைக்கு (என்சி எம்சி) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி 41 மெட்ரோ ரயில் நிலையங்களில் சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. க்யூஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம் போல் தொடரும். பயணி கள், தங்களது பயண அட்டை யில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில் களில் பயணிப்பதற்கு பயன் படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டை யின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ. 50க்கும் குறைவாக) அடை யும் போது, சிஎம்ஆர்எல் பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு அதற்குப் பதிலாக, பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லா மல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத் தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.