tamilnadu

img

சிபிஎம் தலைவர்களுடன் மயிலாடுதுறை எம்.பி. சந்திப்பு

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர்  ஆர்.சுதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்கு வந்து, தலைவர்களைச் சந்தித்தார். அப்போது, அவரை கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், வழக்கறிஞர் ஆர். தாரா ஆகியோர் உடனிருந்தனர்.

;