மதுரை, டிச.9- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 48ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் அரசரடி, மேலப் பொன்னகரம், முனிச்சாலை, மதிச்சியம் ஆகிய பகுதிகளில் 8 மையங்களில் கொடி ஏற்றப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் ஆர். சசிகலா, மாவட்ட நிர்வாகிகள் ஜென்னி, மல்லிகா, யமுனா, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் வி.பானுமதி, சுப்புலட்சுமி, க.சுதா ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சொக்கலிங்க நகரில் நடைபெற்ற விழாவில் மூத்தத் தோழர் அங்கயற் கண்ணி கொடியை ஏற்றினார்.