மேலவளவு தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நினைவஞ்சலி
மதுரை, ஜூன் 30- மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் 1997ஆம் ஆண்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் வெட்டி படுகொலை செய்யப் பட்டனர். இந்த நினைவை போற்றும் வகையில் திங்களன்று 28ஆம் ஆண்டு நினைவு நாள் மேலவள வில் உள்ள விடுதலை களத்தில் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்ற நிலையில், இந்த ஆண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேலவளவில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நினை வேந்தல் நிகழ்ச்சிக்கு கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் ஏ. தன சேகரன் தலைமை வகித்தார். பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவரும், முன் னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவரும், கட்சியின் மாநி லக்குழு உறுப்பினருமான த.செல்லக்கண்ணு, மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம் மன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை யாற்றினார்கள். கட்சியின் தாலுகாக் குழு உறுப்பினர் எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார். மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை புறநகர் மாவட்ட தலைவர் செ.ஆஞ்சி, மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ். ராஜாமணி ஆகியோர் உட்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், ஒன்றிய மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.