பூதலூரில் தியாகி என். வெங்கடாசலம் சிலை! பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி திறந்து வைத்தார்
தஞ்சாவூர், ஜூலை 25 - தஞ்சை மாவட்டத்தில், வர்க்கப் போராட்டத்தை யும், சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஒரு சேர நடத்திய தலைவர்- தோழர் என். வெங்கடா சலம். அதற்காக தமது உயிரையே தியாகம் செய்த மகத்தான போராளி. அவரின் பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழுவானது, பூதலூ ரில் நினைவகம் மற்றும் சிலையை நிறுவியுள்ளது. இவற்றின் திறப்பு விழா, வெள்ளிக்கிழமை யன்று காலை அய்யனாபுரம் சாலையில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி வரவேற்றார். தியாகி என். வெங்கடாசலம் உருவச் சிலையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி திறந்து வைத்தார். மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தோழர் என். வெங்கடாசலம் நினைவகத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி திறந்து வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள், தியாகி என்.வி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர். இதில், அய்யனாபுரம் முருகேசன் (தமிழர் தேசிய முன்னணி), திமுக ஒன்றியச் செயலாளர் அசோக்குமார், குணா (தமாகா), சிபிஎம் மூத்த தலைவர்கள் என். சீனிவாசன், ஆர்.சி. பழனிவேலு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், தஞ்சாவூர் மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.