tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் மாநாட்டிற்கு தியாகி கே.சக்திவேல் நினைவு சுடர் பயணம் புறப்பட்டது

போக்குவரத்து ஊழியர் மாநாட்டிற்கு  தியாகி கே.சக்திவேல் நினைவு  சுடர் பயணம் புறப்பட்டது

கிருஷ்ணகிரி, ஆக. 4- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு) 16வது மாநில மாநாட்டிற்கான தியாகி தோழர் கே.சக்திவேல் நினைவு சுடர் பயணம் திங்களன்று ஓசூர் போக்குவரத்து பணிமனை முன்பு இருந்து புறப்பட்டது. தருமபுரியில் ஆகஸ்ட் 5, 6, 7 தேதிகளில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான இந்த சுடர் பயணத்தை செயலாளர் பிரபாகரன் மற்றும் துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 1980ஆம் ஆண்டு ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த தோழர் கே.சக்திவேல், சிஐடியு தொழிற்சங்கத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றினார். தோழர் கே.எம்.ஹரிபட் தலைமையில் அந்தோணி ஜார்ஜ் முத்து, சிவக்கொழுந்து, சாமுவேல் சுந்தரம் உள்ளிட்ட தோழர்களுடன் இணைந்து அயராது உழைத்து அசோக் லேலண்ட் மற்றும் ஓசூர் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்கங்களை முழு வீச்சில் அமைத்தார். நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத அடக்குமுறையின் உச்சமாக 1983ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று தோழர் கே.சக்திவேல் மாலையில் நடந்து செல்லும்போது லால் தொழிற்சாலை அருகில் அடித்துக் கொல்லப் பட்டார். அன்றிலிருந்து சிஐடியு தொழிற்சங்கத்திற்காக ஒன்றுபட்ட தரும புரி மாவட்டத்தில் உயிர்நீத்த தியாகி தோழர் கே.சக்திவேல் நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுடர் பயணத்தில் போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகள் குமார், சுதந்திர மன், கலையரசன், வேலு, நஞ்சுண்ட செட்டி, தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பி.ஜி.மூர்த்தி, அசோக் லேலண்ட் சிஐடியு நிர்வாகிகள் தரணியன், ஸ்டாலின் ராஜா, மாதவன், சிஐடியு முன்னாள் நிர்வாகிகள் எம்.சுந்தரம், நாராயணமூர்த்தி, சிபிஎம் மாநகர செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றிய செயலாளர் ஆர்கே.தேவராஜ், விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ராஜா ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். ஓசூர் ராம்நகர் வழியாக பேருந்து நிலை யம் அடைந்து அங்கு மாநில மாநாடு மற்றும் தியாகிகள் சுடர் பயணம் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரி மாநில மாநாட்டை நோக்கி சுடர் பயணம் சென்றது.