மணிப்பூர் வன்முறை வழக்கு : ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி, ஆக. 20 - மணிப்பூர் வன்முறை யை முன்னாள் முதல்வர் பைரேன் சிங் தூண்டி விட்டதாக கூறப்படும் ஆடியோ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கள் சஞ்சய் குமார், சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பைரேன்சிங் ஆடியோ ஆய்வு தொடர் பாக ஒன்றிய தடயவியல் அறிவியல் ஆய்வகம் சமர்ப்பித்த நடவடிக்கை அறி க்கை மீது உச்ச நீதிமன்ற கடும் அதிருப்தி அடைந்து ள்ளது. இதுதொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, “தடயவியல் சோதனை கள் தவறாக வழிநடத்தப் பட்டுள்ளன. இரண்டிலும் ஒரே நபர் தான் பேசுகிறா ர்கள் என்பதை அடையா ளம் காண முடியுமா என்பதுதான் எங்கள் கேள்வி. ஆனால் எங்களுக்கு வெறும் ஏளனமான பதில்கள் மட்டுமே வழ ங்கப்பட்டுள்ளன” என்று சாடினர்.