tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்குக! சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்குக! சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

கரூர், அக்.8 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க கரூர் மாவட்ட  3 ஆவது மாநாடு கரூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கோகிலா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.புஷ்பவள்ளி வரவேற்றார். மாநிலத் தலை வர் எஸ்.ரத்தினமாலா மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர்  என்.சாந்தி வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்டப் பொருளாளர் கே.கலா வரவு,செலவு அறிக்கையை முன்வைத் தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு. செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் ஆகியார் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி  மாநாட்டை நிறைவு உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் இ.விஜய லட்சுமி நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத்தின் புதிய தலைவராக பி.பத்மாவதி, செயலாளராக என்.சாந்தி,  பொருளாளராக கே. கலா, மாநில செயற் குழு உறுப்பினராக ஏ.கோகிலா, மாவட்ட துணைத் தலைவர்களாக ஆரோக்கிய மேரி, விஜயலட்சுமி, பரிதா, வளர்மதி, துணைச் செயலாளர்களாக ஹெப்சி, சுதா, வாசுகி, புஷ்பவள்ளி, செல்வி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானங்கள்  அங்கன்வாடி ஊழியர், உதவி யாளர்களை அரசு ஊழியராக்கிட வேண்டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்சன் வழங்க வேண்டும். உயர்  நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியா ளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.  அங்கன்வாடி திட்டத்திற்கான நிதி குறைப்பை தவிர்த்து திட்டத்தை தனியா ருக்கு வழங்க கூடாது. அங்கன்வாடி திட்டத் தையும் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இணைய தள சேவையை சீர் செய்து  கிராமங்களின் நெட்வொர்க்கிற்கு ஏற்ப  சிம்கார்டு வழங்கி அனைத்து மையங்களுக் கும் வைபை இணைப்பு வழங்க  வேண்டும். அனைத்து அங்கன்வாடி மை யங்களுக்கும் 5ஜி செல்போன்களையும், 5ஜி சிம் கார்டையும் வழங்க வேண்டும்.  காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.