tamilnadu

img

வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரா 11 பேர் பலி ; கிராமங்கள் துண்டிப்பு

வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரா 11 பேர் பலி ; கிராமங்கள் துண்டிப்பு

மும்பை நாட்டில் பருவமழை தீவிர மடைந்து வருகிறது. தற் போது வடமாநிலங்களை போல தென் மற்றும் மேற்கு மாநி லங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மகா ராஷ்டிராவில் மீண்டும் அதீத அள வில் கனமழை பெய்து வருகிறது. அங்கு செப்டம்பர் 27 முதல் 29 வரை கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சோலாப்பூர், ஜல்னா, சத்ரபதி சம்பாஜி நகர், தாராஷிவ் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளித்து வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரா முழுவதும் கனமழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 11க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். பலர் காணாமல் போயுள் ளனர். பல ஆயிரம் வீடுகளும் சேத மடைந்துள்ளன. அதே போல  மாநிலம் முழுவதும் உள்கட்ட மைப்புகளும் கடுமையாக உருக்குலைந்துள்ளன.  பாம்ரகட் மற்றும் பெர்ல்கோட் இடையேயான தேசிய நெடுஞ் சாலை பாலம் நீரில் முற்றிலும் மூழ்கியுள்ளது. மேலும் லத்தூர் மாவட்டத்தில் மட்டும் 60 சாலை கள் மூடப்பட்டன. மோஜே நாரா யண்பூர் மற்றும் தேவ் தகாலி உட்பட பல கிராமங்கள் துண்டிக்கப்பட் டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் வான்வழி மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப்படையும் மகா ராஷ்டிராவில் களமிறங்கியுள்ளது.