மதுரை, அக். 25- மதுரையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்த நிலையில், வெள்ளி யன்று மதியம் 2 மணியிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தல்லாகுளம், செல்லூர், ஆரப்பாளையம், பழங்கா நத்தம், பைபாஸ் ரோடு, விராட்டிபத்து, விளாங்குடி, மீனாட்சிபுரம், முல்லைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தீபாவளி நேரம் என்பதால் நகரின் மையப் பகுதிகளான நான்குமாசி வீதி களில் கடை வைத்திருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு மழையால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக கன மழை பெய்வதால், பொதுமக்கள் அதிக ளவில் பொருட்கள் வாங்க முடிவதில்லை. புதூர் பகுதி, சர்வேயர் காலனி அரு கில் உள்ள பாரத் நகர் பகுதியில் இடுப்பள விற்கு தண்ணீர் தேங்கியதால் வீடுகளுக் குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் எப்படி வீடுகளில் தங்குவது என்ற அச்சத்தில் உள்ளனர். காந்திபுரம், பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. ரிசர்வ் லைன் பகுதியில் மழை நீர் சாலை யில் தேங்கியதால் அப்பகுதியில் வாக னங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பள்ளிக்குச் சென்ற குழந்தை களை பெற்றோர்கள் அழைத்து வரும் போது இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது. மீனாட்சிபுரம், முல்லை நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. கடச்சனேந்தல் எல்சிவி நகரில் உள்ள பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் காலியாக உள்ள இடங்க ளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ள தால், சாலைகளை உடைத்து தண்ணீரை வேறு பகுதிக்கு கடத்தும் பணியை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் சிறு மழை பெய்தாலும், ஆனையூர், செல்லூர், கோமதிபுரம் ஆகிய இடங்கள் அதிகளவில் தண்ணீர் தேங்கும் பகுதி களாக உள்ளன. இப்பகுதிகளை ஒட்டி கண்மாய்கள் உள்ளன. எனவே போர்க் கால அடிப்படையில் மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.