மதுரை மல்லி இரண்டாவது நாளாக ரூ.3000 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் தொடர் முகூர்தங்கள் காரணமா தொடர்ந்து பூக்கள் விலை அதிகரித்து வருகிறது.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது. அதேபோல் புதனன்று ஓணம் பண்டிகை தொடங்கியுள்ள நிலையிலும் மற்றும் தொடர் முகூர்த்தம் காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மதுரை மலர் சந்தையில் இரண்டாவது நாளாக மல்லிகைப்பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கும், சம்மங்கி ரூ 250 , பிச்சி கிலோ ஆயிரம் ரூபாய் , முல்லை 1200 ரூபாய், பட்டன் ரோஸ் 180 ரூபாய்க், கனகாம்பரம் 1800, சென்டு மல்லி 100 ரூபாய், அரலி கிலோ 200 ரூபாய் விற்கப்படுகிறது மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது இன்னும் இரண்டு தினங்களுக்கு பூக்களின் விலை உயர்ந்தே காணப்படும் என்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.