tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

புதிய நிர்வாகிகள் தேர்வு 

திண்டுக்கல், டிச.9- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் திண்டுக்கல் மாவட்டக் குழு கூட்டம் வத்தலகுண்டுவில் நடைபெற்றது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.  மாவட்டத் தலைவராக எம்.சிலம்பர சன், துணைத் தலைவர்களாக தன லட்சுமி, பி,முருகன், துணைச் செயலாள ராக சேதுசிவன், செயற்குழு உறுப்பின ராக ஆனந்த் உள்ளிட்டோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்பு

பழனி, டிச.9- திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டாங் குளம், புதுநகர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (37) என்பவரை இரண்டு நாட்க ளாக காணவில்லை என உறவினர்கள் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தி ருந்தனர். இந்நிலையில் வியாழனன்று முகேஷ் தட்டாங்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்து கிடப்பதாக வந்த தக வலின் பேரில் காவல்துறை முகேஷின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

எல்ஐசி ஊழியர் சங்கம் சார்பில் பெரியகுளத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்

தேனி, டிச.9- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் பெரியகுளத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.  பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி யின் பங்குகளை விற்பனையை எதிர்த்து நேரு பிறந்த நாளான டிசம்பர் 14 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற வுள்ளது. மாநாட்டின் நோக்கம் குறித்து சங்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு கூட் டம் நடைபெற்றது.  நிகழ்விற்கு கிளை தலைவர் டிபி.சரவணகுமார் தலைமை வகித்தார். மதுரை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன், எம்.அன்புக்கரசன், சிஐ டியு நிர்வாகி மன்னர்மன்னன், லியாஃபி முகவர் சங்க நிர்வாகி முருகேசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க கிளைச் செயலாளர் எம்.அஹமது ஆதம் நிறைவுரையாற்றினார்.

இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு

இராமநாதபுரம், டிச.9- ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்டரிக்ஸ் நிறுவனத்திற்கு 6 ஆயிரம் பெண் வேலைநாடுநர்கள் தேவைப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான நேர்காணல் டிசம்பர் 14 அன்று இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடை பெறும். இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான பணி வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் பன்னி ரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 20-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் வழங்கப் படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்கு வரத்து வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இராமநாதபுரத்தை சேர்ந்த பெண் வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும், அரசுத் துறைகளில் கோரப் படும் பணியிடங்களுக்கு அரசு விதி முறைகளின்படி பரிந்துரை செய்ய பரி சீலிக்கப்படுமெனவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

விருதுநகர், டிச.9- விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கு வதற்கான வாக்காளர் பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பெற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் 5 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நகராட்சிகளில் 398ம், பேரூராட்சிகளில் 153 என மொத்தம் 551 வாக்குக் சாவடி களுக்கான வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியில் 74,679 வாக்காளர்களும், இராஜபாளை யத்தில் 1,14,828, சாத்தூரில் 25,333, திரு வில்லிபுத்தூரில் 68,561, விருதுநகரில் 62,494 என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயி ரத்து 895 வாக்காளர்கள் உள்ளனர். செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15,148 வாக்காளர்களும், காரியாபட்டியில் 14,673, மல்லாங்கிணறில் 10,308, மம்சாபுரத்தில் 16,558, எஸ்.கொடிக்குளம் 11,245, சேத்தூ ரில் 17,373, சுந்தரபாண்டியம் 7,483, வ. புதுப்பட்டி 6,811, வத்ராப் 14,148 என  மொத் தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 747 வாக் காளர்கள் உள்ளனர்.

மாரடைப்பால் அரசுப்பேருந்து  ஓட்டுநர் பேருந்திலே மரணம்

மதுரை, டிச.9-  தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பேருந்தை பாதுகாப் பாக நிறுத்தி 30 பயணிகளை காப் பாற்றிய ஓட்டுநர் மரணமடைந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் செக்கானூர ணியை சேர்ந்த ஆறுமுகம் (44)  அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வியாழனன்று காலை கொடைக்கானல் செல்லும் பேருந்தை இயக்கிய அவர் ஆரப் பாளையம் பேருந்து நிலையத்திலி ருந்து காலை 6.30 மணிக்கு பயணி களை ஏற்றிக் கொண்டு கொடைக் கானல் கிளம்பிய 5 நிமிடத்தில், பைபாஸ் சாலையில் குரு தியேட் டர் சிக்னல் அருகே திடீரென்று அவ ருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எனவே, பயணிகள் பாதிக்கப் படக் கூடாது என்று பேருந்தை ஓர மாக நிறுத்தி மாத்திரை சாப்பிட்டு விட்டு வண்டியை எடுப்பதாக கூறி யுள்ளார். அப்போது மாத்திரை சாப் பிட்டு தண்ணீர் அருந்தும்போது மார டைப்பு ஏற்பட்டு சீட்டிலேயே மயங் கினார்.  இதனால், பயணிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பேருந்தை பாது காப்பாக நிறுத்தி 30 பயணிகளை காப்பாற்றி, ஓட்டுநர் மரணமடைந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் பணியால்  மன அழுத்தம்

இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், ஓய் வில்லாமல் பணி வழங்கப்படு வதே இது போன்ற துயரச்சம்பவங் களுக்கு காரணம்.  ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு மதுரை-கொடைக்கானல், மதுரை-திருப்பூர் என தொடர்ந்து பணி கொடுத்துள்ளனர். இதுபோல அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி கொடுக்கப்படுகிறது.  இதனால், சரியான ஓய்வின்றி, தூக்கமின்றி உடல் நலம் கெட்டு, மன அழுத்தத்துடன் பணியாற்றும் சூழல் தொழிலாளர்களுக்கு ஏற் படுகிறது என்று கூறினர்.
 

;