tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம்

நாகர்கோவில், டிச. 7- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோ வில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம் நாகர்கோவில் ட தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாயன்று நடந்தது. இந்த நிகழ்விற்கு மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார் . பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவ டிக்கை காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி, குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு அதிகாரி கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர். அவர்கள் பேசுகையில், பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் துன் புறுத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் இருப் பதை விட பள்ளிகளில் தான் மாணவ மாணவிகள் அதிகமான நேரத்தை செலவிடுகிறார்கள். குற்ற தடுப்பு நடவ டிக்கைகளில் தலைமை ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவி கள் கொடுக்கக்கூடிய புகார்களை உட னடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை மறைக்கக் கூடாது தற்போது காவல்துறை சார்பில் எல்லா பள்ளிகளிலும், குறிப்பாக மாண விகள் மட்டும் பயிலக்கூடிய பள்ளிகளி லும், மாணவ, மாணவிகள் பயிலக் கூடிய பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும். இந்த புகார் பெட்டிகளை  வாரம் ஒரு முறையோ அல்லது 10 நாட்க ளுக்கு ஒரு முறையோ தலைமை ஆசிரியர் திறந்து அதில் ஏதாவது புகார் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பாலியல் தொடர்பான  புகார் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர். இந்த விழிப்புணர்வு முகாமில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

தூத்துக்குடி, டிச.7  தூத்துக்குடியில் செல்போன் கடை யில் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி முள்ளக்காடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரமிக்கேல்  மகன் வேல்முருகன் (29). இவர் அப்பகுதியில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திங்களன்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 3 ஆன்ட்ராய்டு செல் போன்கள், 16 பட்டன் செல்போன்கள், 3 ஹெட்போன்கள், பவர் பேங்க, மற்றும் ரூ.3ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.50ஆயிரம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயீ லன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களில் 5 கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை  கர்ப்பிணி ஆக்கிய போக்சோவில் கைது

தூத்துக்குடி, டிச.7  கோவில்பட்டியில் 17 வயது சிறுமியி டம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணி ஆக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம்,  கோவில் பட்டி அருகேயுள்ள பாண்டவர் மங்க லம், தெற்கு காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் ராஜசேகர் (22), இவர் 17 வயது சிறுமியிடம் காத லிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதன் காரணமாக கர்ப்பமடைந்த மேற்படி சிறுமிக்கு கடந்த 5ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.

போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி  காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை

தூத்துக்குடி, டிச.7  தூத்துக்குடியில் பைக் மீது காவல்துறை வாகனம் மோதிய விபத்தில் ரோடு ரோலர் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி சிவந்தாகுளம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமணி மகன் முத்துசெல்வம் (63). கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரோடு ரோலர் ஆப்ரேட்டராக வேலைபார்த்து வருகிறார். செவ்வாயன்று காலை பைக்கில் அலுவல கத்திற்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி 3வது மைல் பாலம், எப்.சி.ஐ., குடோன் அருகே சென்றபோது, தூத்துக்குடி ஆயுதப்படை அலுவலகத்தில் இருந்து எஸ்பி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் அவரது பைக் மீது மோதியது. இதில் நிலைடுமாறி போலீஸ் வாக னத்தின் பின் சக்கரத்தில் சிக்கிய முத்து செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து நடந்த இடத்தினை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, போலீஸ் வாகனத்தை ஓட்டிவந்த மதுரை அலங்காநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜபாண்டி என்ற காவலரி டம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முத்துசெல்வத்தின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தென்பாகம் காவல் நிலை யத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம்  டிஎஸ்பி கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிஐடியு குளிக்கும் போராட்டம் வெற்றி! டிசம்பர் 20 முதல்  குளிக்க குற்றாலத்தில் அனுமதி

தென்காசி, டிச. 7- சிஐடியு நடத்திய குளிக்கும் போராட்டத் தால் வரும 20ஆம் தேதிமுதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதித்து தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளன.   இது தொடர்பாக சிஐடியு தென்காசி மாவட்டச் செயலாளர் எம்.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது- இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் , வேன் ஓட்டுனர்கள், தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள்  வாழ்க்கைக் காக  சிஐடியு குளிக்கும் போராட்டம் நடத்தி யது. இந்தப் போராட்டத்தின் விளைவாக தென்காசி ஆர்டிஓ ,காவல்துறை அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் குற்றாலத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு டிசம்பர் 20 முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை   சமூக இடைவெளி யுடன் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தென்காசி மாவட்ட சிஐடியு சங்கம் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

சமஸ்தாவை பிளவுபடுத்தும் லீக் முயற்சி வெற்றி பெறாது : ஐஎன்எல்

கோழிக்கோடு, டிச. 7- சன்னி பிரவு முஸ்லீம்களின் அதிகார பூர்வ அமைப்பான சமஸ்தாவை பிளவு படுத்தி அதன் மூலம் அவர்களின் நடுநிலை, மதச்சார்பற்ற நிலைப்பாட்டை அழிக்கும் முஸ்லிம் லீக் தலைமையின் திட்டமிட்ட நட வடிக்கை வெற்றி பெறப்போவதில்லை என ஐஎன்எல் (இந்திய தேசிய லீக்) கேரள மாநில பொதுச்செயலாளர் காசிம் இருக்கூர் தெரி வித்துள்ளார். முஸ்லிம் லீக் நினைப்பது போல் இது அவர்களது சட்டைப் பைக்குள் இருக்கும் அமைப்பு அல்ல. கேரளாவில் 1930 களின் இறுதியில் முஸ்லிம் லீக் உருவானது. அதற்கு முன்பே 1926 இல் ‘சமஸ்தா’ நிறு வப்பட்டது. இது சொந்தக் கண்ணோட்டத் தையும் உறுதியான நிலைப்பாட்டையும் கொண்ட அறிஞர்களால் வழிநடத்தப்படு கிறது. அந்த அமைப்பை தனது கட்டுப் பாட்டில் கொண்டுவரும் நோக்கத்துடன் 1989 இல் சமஸ்தா பிளவுபடுத்தப்பட்டது. மீண்டும் பிளவுபடுத்த நடத்தும் முயற்சி வெற்றி பெறாது என்று ஐஎன்எல் பொதுச் செயலாளர் காசிம் இரிக்கூல் கூறினார்.

;