வாழ்வில் வெற்றியடைய இனம் ஒரு தடையல்ல திருநங்கை கிரேஸ் பானு பேச்சு
தூத்துக்குடி, மே 3- தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவின் வணிகவியல் துறை சார்பில் முன்னேற்றத்திற்கு இனம் ஒரு தடையல்ல என்ற பாலின பாகுபாடு கருத்தரங்கம் கல்லூரியின் செயலர் சோமு, முதல்வர் நாகராஜன், மற்றும் இயக்குனர் அருணாச்சல ராஜன் ஆகி யோர் முன்னிலையில் பொன்விழா அரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் பெவின்குமார் வரவேற்புரை மற்றும் நன்றியுரை மாணவி சுபாஷினி நல்கி னார். விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் திருநங்கை பொறியி யல் பட்டதாரி கிரேஸ் பானு பங்கேற்று பெண்கள் எவ்வாறு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் மற்றும் திருநர் திரு நங்கை சமூகத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதில் சமுதாயத்தில் பங்கு என்ன என்று சிறப்புரை ஆற்றினார்.
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இலக்கு 65 ஆயிரம்; ஊசிபோட்டது 4 ஆயிரம் பேர்
நாகர்கோவில், மே 3- கன்னியாகுமரி மாவட்டத்தில் சனியன்று (ஏப்.30) 2,200 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ண யிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 பேர் மட்டுமே ஊசி போட்டுள்ளனர். முன்களப் பணியாளர்கள் பலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட னர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தா தவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் தடுப்பூசி மையங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இன்று நடந்த மெகா தடுப்பூசி முகா மில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டு இருந்த நிலையில் சுமார் 4 ஆயி ரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொரோனா இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் விளங்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேருந்திலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கும்பகோணம், மே 3- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள உடை யார்பாளையம் சேர்ந்தமங்கலம் பகுதி யைச் சேர்ந்த மாணவர் சதீஷ்குமார் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி யில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை படித்து வந்தார். இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங் கொண்டம் அரசு பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் நின்ற வாறுசென்ற போது பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் பேருந்து திரும்பும் போது, சாலையின் நடுவே மின்கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் மோதி நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பகோணம் மேற்கு காவல் நிலை போலீசார் விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு கவனக்குறைவாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கல்லூரி மணவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன் கூறுகை யில், கும்பகோணத்திலிருந்து ஜெயங் கொண்டம் பகுதிக்கு செல்ல போது மான பேருந்து வசதி இல்லை. இதனால் படியில் பயணித்து மரணமடைந்த மாண வர் சதீஷ்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கும்பகோணம் முதல் ஜெயங்கொண்டம் வரை பேருந்துகளை கூடுதலாக இயக்கிட வேண்டும். மாண வர் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு தாமதமின்றி நிறைவேற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
12-ஆம் வகுப்பு வினாத்தாள் அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு
திருநெல்வேலி, மே 3- தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு மே 10-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி யும் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12-ஆம் வகுப்பு தேர்வையொட்டி அதற்கான வினாத்தாள்கள் நெல்லை மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இவை பாளையில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வினாத்தாள் பாதுகாப்பு அறைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறு கிறது. இதற்காக தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதி களும் அந்தந்த பள்ளிகளில் தயார் நிலை யில் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார்.
தோட்டங்களுக்குள் புகுந்த கரடி, காட்டுப் பன்றிகள்: வாழைகள் நாசம்
திருநெல்வேலி, மே 3- களக்காடு மலையில் கோடை காலம் என்பதால் கடும் வெப்பம் நிலவுகிறது. இதை யடுத்து வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், குடிநீருக்காகவும் வனவிலங்குகள் அதிகள வில் மலையடிவாரத்தில் புகுந்து வருகின்றன. இந்நிலையில் மஞ்சுவிளை, காமராஜ் நகர் பகுதிகளிலும் வனவிலங்குகள் அட்ட காசம் தொடர்கதையாகி வருகிறது. இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் செல்லும் கரடிகள், காட்டு பன்றிகள் வாழைகளை நாசம் செய்து வருகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் இப்பகுதி யில் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை கரடி மற்றும் பன்றிகள் நாசம் செய்துள்ளன. இத னால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:- ‘‘வனவிலங்குகளை விரட்ட வனத்துறை யினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவில் ரோந்து பணிக்கு கூட வரவில்லை. நாங்கள் தான் எங்கள் உயிரை பணயம் வைத்து காவல் பணி யில் ஈடுபடுகிறோம். எனினும் கரடிகள், பன்றி களிடமிருந்து வாழைகளை காப்பாற்ற முடியவில்லை. சில நேரங்களில் காவலுக்கு எங்களு டன் வளர்ப்பு நாய்களும் வரும். அப்போது வேட்டைக்கு செல்வதாக எங்கள் மீதே வனத்துறையினர் பொய் வழக்கு போடு கின்றனர். இழப்பீடுகளும் வழங்க வில்லை. மலையடிவாரத்தில் மின் வேலி கள் செயல் இழந்து கிடப்பதே வனவிலங்கு கள் அட்டகாசம் அதிகரிக்க காரணமாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி, மே 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புளி யங்குடி நகர கமிட்டி சார்பில் ஏப்ரல் 2-ஆம் தேதி சிந்தாமணி மேல ரத வீதியில் ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாரியப்பன் தலைமை வகித்தார். நகர் குழு உறுப்பினர்கள் பே. சீதாலெட்சுமி, கே.சீனிப்பாண்டி, பி.முரு கன், பி.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளியங்குடி நகரச் செயலா ளர் எம்.மணிகண்டன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வன்னியபெருமாள், போக்குவரத்து சங்க மாவட்ட பொது செயலாளர் ஜோதி ஆகியோர் விளக்கிப் பேசினர். தென்காசி மாவட்டச் செயலாளர் ப.முத்துப்பாண்டியன் நிறைவு செய்து பேசினார். கூட்டத்தில் கிளைச் செயலாளர் எஸ். வேலாயுதம், எம்.காளி, முத்த தோழர்கள் ரத்தினம், ஆறுமுகம், தீக்கதிர் மாரி யப்பன், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மே 31இல் திருக்காக்கரை இடைத்தேர்தல்
கொச்சி, மே 3- கேரளத்தில் திருக்காக்கரை சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர் தல் மே 31ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் பி.டி.தாமஸ் கால மானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் மூன்றாம் தேதி நடக்கும். திங்களன்று (மே 2)நடைபெற்ற தேர்தல் ஆணையக் கூட்டத்தில் தேதி முடிவு செய்யப்பட்டது. ஒடிசாவில் உள்ள பிரஜராஜா நகர் மற்றும் உத்தர காண்டில் உள்ள சம்பாவத் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடை பெறவுள்ளது. புதனன்று தேர்தல் அறி விப்பு வெளியாகும். மே 11ஆம் தேதி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க லாம். மனுக்கள் ஆய்வு மே12ஆம் தேதி நடைபெறும். மே 16 வரை வேட்புமனுக் களை திரும்பப்பெறலாம். 2021 கேரள சட்டப்பேரவை தேர்தலில் யுடிஎப் வேட்பாளர் பி.டி.தாமஸ் 58,707 வாக்குகளுடன் (43.68 சதவிகிதம்) வெற்றிபெற்றார். எல்டிஎப் ஆதரவு சுயேச்சை வேட்பாளர் டாக்டர் ஜே. ஜேக்கப் 44, 894 வாக்குகள் பெற்றார். பாஜகவின்எஸ். ஷாஜி 15,218 வாக்கு களும், டி 20 வேட்பாளர் டெரிதாமஸ் 13,773 வாக்குகளும் பெற்றனர்.
விபத்தில் பெண் பலி
திருநெல்வேலி, மே 3- தென்காசி மாவட்டம் கடையம் அருகே கருத்தப்பிள்ளையூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி ஜானகி (55). தேசிய ஊரக தொழிலாளியான இவர் பங்களா குடியிருப்பில் நடைபெற்ற பணிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்த ஆரோன் மகன் அவினாஷ் (20) தனது தாயாரை பங்களா குடியிருப்பில் நடை பெறும் பணிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற ஜானகியின் சேலையானது காற் றில் பறந்து, அவினாஷ் வந்த மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததுடன் ஜானகியும் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த ஜானகி, அவி னாஷ் ஆகியோரை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு ஜானகியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து கடை யம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
நெல்லையில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி, மே 3- பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து மாலை (43). இவர் கடந்த 4-ஆம் தேதி இடப்பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்து கீழத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (48), நடுவக்குறிச்சியை சேர்ந்த முருகன் (46), குஞ்சு முருகன் (28) ஆகியோரை கைது செய்து பாளை யங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று காவல்துறை யினர் ஆட்சியருக்கு பரிந்துரை செய்த னர். இதையேற்று ஆட்சியர் விஷ்ணு, இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல் பணகுடி நடுத்தெரு வைச் சேர்ந்த இசக்கியப்பன் என்ற தாஸ் (26) போக்சோ வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளார். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.
ஒரு டன் குட்கா பறிமுதல்
கும்பகோணம், மே 3- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவல் சரக துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழ கேசன், தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமை யிலான காவலர்களுக்கு கிடைத்த ரக சிய தகவலின் அடிப்படையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கண்டெய்னர் லாரி யில் ரகசிய அறை அமைத்து, பெங்களூ ருவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,100 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா (1 டன்) பொருட்களை அதி ரடியாக லாரியுடன் பறிமுதல் செய்த னர். இந்த கடத்தல் தொடர்பாக 6 பேரி டம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆலோசனை
தூத்துக்குடி, மே 3- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய முதலாவது மாவட்ட வாழ்விட வளர்ச்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சிவகிருஷ்ண மூர்த்தி, தலைமை பொறியாளர் சண்முக சுந்தரம், நிர்வாக பொறியாளர் திருநெல்வேலி கோட்டம் சாந்தி, உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜா கொம்பையா பாண்டியன், இளநிலை பொறி யாளர் மணிகண்டன், தூத்துக்குடி மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப் பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகளை உருவாக்க பிற துறைகளிடையே ஒருங்கி ணைப்பை ஏற்படுத்தி பணிகளை துரிதமாக முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதைத் தவிர புதிய நிலங்கள் கண்டறி யப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் குடும்பங்களை மறு குடியமர்வு செய்வதற்கும் ஆலோசிக்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் நீர் நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கி ரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்வ தற்கும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே குடியமர்வு செய்யப்பட்ட திட்டப்பகுதி களில் குடியிருப்போர் நல சங்கம் ஏற்படுத்தி பராமரிப்பு பணிகளில் அரசின் பங்களிப்பை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க அறி வுறுத்தப்பட்டது.
தேசிய மாணவர் படை பயிற்சியில் தங்கப்பதக்கம் : ஹோலி கிராஸ் பள்ளி அதிகாரிக்கு எஸ்பி பாராட்டு
தூத்துக்குடி, மே 3- தேசிய மாணவர் படை பயிற்சியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி அதிகாரிக்கு, எஸ்பி பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்தார். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலிய ரில் உள்ள தேசிய மாணவர் படை அதிகாரி கள் பயிற்சி அகாடமியில் மார்ச் 1 முதல் 30 வரை தேசிய மாணவர் படை அதிகாரி களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை பெண் அதிகாரி லோலிடா ஜுடு என்பவர் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் செவ்வாயன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை எல்டிஎப் களமிறக்கும்: பி.ராஜீவ்
கொச்சி, மே 3- திருக்காக்கரை இடைத்தேர்தலுக்கு இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்), தயாராக உள்ளதாகவும், வெற்றி வாய்ப் புள்ள வேட்பாளரை எல்டிஎப் களமிறக்கும் என்றும் அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்துள் ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியராஜீவ், கேரள சட்டப்பேரவையில் இடதுசாரிகளுக்கு 99 இடங்கள் உள்ளன. அந்த எண்ணிக்கையை 100 ஆக அதி கரிக்க வேண்டும் என்பதுதான் இடைத்தேர் தலின் முக்கிய குறிக்கோள் என தெரி வித்தார். திருக்காக்கரை மக்கள் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக உள்ள னர். வளர்ச்சியை எதிர்ப்பவர்களை திருக் காக்கரை மக்கள் நிராகரிப்பார்கள். வளர்ச்சி யையும் மதச்சார்பற்ற அரசியலையும் நிலை நிறுத்த இடதுசாரிகளுடன் மக்கள்கரம் கோர்ப்பார்கள். திருக்காக்கரை கேரளா வின் இதயமாக மாற்றக்கூடிய திட்டம்கே ரயில். அதனை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என பி.ராஜீவ் கூறினார். அனுதாபம் கைகொடுக்காது: டொமினிக் திருக்காக்கரா தொகுதியில் பி.டி.தாம ஸின் மனைவி உமாதாமஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற நிலையில், அனு தாபம் பலிக்காது என காங்கிரஸ் தலைவர் டொமினிக் பிரசன்டேஷன் தெரிவித்துள் ளார். திருக்காக்கரை அனுதாபம் தரும் தொகுதி அல்ல. நிறுத்தப்பட்டவர் அப்படி வெற்றி பெறுவார் என்று கருதினால், முடிவு பின்னடைவாக அமையும். சமூக சூழலை கணக்கில் கொள்ளாவிட்டால் பின்விளைவு களை சந்திக்க நேரிடும். கே.வி.தாமஸ் இன்னும் ஏஐசிசி உறுப்பினராக உள்ளார். ஒருவர் முரண்பட்டாலும் அது இடைர் தேர்தலை பாதிக்கும் என டொமினிக் பிர சன்டேஷன் தெரிவித்துள்ளார்.