tamilnadu

img

தேனி : ரவீந்திரநாத் வெற்றி செல்லாது!

சென்னை, ஜூலை 6 - தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்ய ஏதுவாக, தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வெற்றியை எதிர்த்து வழக்கு

கடந்த 2019-ஆம் ஆண்டு  நடைபெற்ற மக்களவைத் தேர்த லில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ஓ.பி. ரவீந்திரநாத். இவர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை 76 ஆயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனிடையே, ரவீந்திர நாத்தின் வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். “ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி., வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்து மோசடி செய்துள்ளார்; வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தே ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்; எனவே, அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று மிலானி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மறுபுறத்தில், மிலானியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல; எனவே, இந்த மனுவை விசார ணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் எம்.பி. நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்தார். எனினும், நீதிபதி எஸ்.எஸ்.  சுந்தர், மிலானியின் மனுவை விசா ரணைக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது விசாரணை நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து ரவீந்திரநாத் எம்.பி.யும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தேர்தல் அதிகாரிகள் முன்பும் ஆஜ ராகி ஆவணங்களை வழங்கி னார். அப்போது தன் மீதான குற்றச் சாட்டுக்களை ரவீந்திரநாத் மறுத்தார்.

மீண்டும் விசாரணை

இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் சில விளக்கங் களை ரவீந்திரநாத்திடம் எழுப்பி யிருந்தார். அதற்கு, வழக்கு தீர்ப்பு  கட்டத்திற்கு வந்துவிட்ட பிறகு மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டுமானால், வழக்கையே மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடி யும் என ரவீந்திரநாத் தரப்பில் தெரி விக்கப்பட்டது. நீதிபதியும் ரவீந்தி ரநாத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க ஒப்பு தல் அளித்தார். அதன்படி, கடந்த ஜூன் 28 அன்று ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டார். ரவீந்திரநாத்தும் ஜூன் 28  அன்று நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். தனது தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீராம் கேட்ட கேள்விகளுக்கு சாட்சிக் கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித் தார். மனுதாரர் மிலானி தரப்பு  வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் அவர் பதிலளித் தார். அப்போது அதிகார துஷ்பிர யோகம், ஆவணங்களில் திருத் தம், சொத்துகளை முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை முழு மையாக மறுத்த ரவீந்திரநாத், சுமார் மூன்றரை மணி நேரத்திற் கும் மேலாக தனது தரப்பிலான பதில்களை வழங்கினார். இவ்வாறு வாதங்கள் முடி வடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டு இருந்த நிலையில், வியாழ னன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தீர்ப்பு வழங்கி னார். அப்போது, “2019 நாடாளு மன்றத் தேர்தலில் தேனி தொகு தியில் ஓ.பி. ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது” என அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

மேல்முறையீடு செய்யலாம்

இதனை சற்றும் எதிர்பார்க்காத ரவீந்திரநாத் தரப்பு, கடும் அதிர்ச்சிக்கு உள்ளானது. எனினும், மேல்முறையீட்டிற்கு செல்ல உள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், ரவீந்திரநாத் மேல் முறை யீடு செய்ய ஏதுவாக, தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார். தற்போது, ஓ.பி. ரவீந்திரநாத் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்து, உச்சநீதிமன்றத்தில் தனக்கு சாதகமான உத்தரவைப் பெறாவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் வாய்ப்பு  உள்ளது. மேலும், மக்களவையில் அதிமுகவின் ஒற்றை எம்.பி.யாக ரவீந்திரநாத் மட்டுமே உள்ளார். அவரது பதவி பறிபோகும் நிலையில், மக்களவையில் அதிமுக-வின் பிரதிநிதித்துவமும் பூஜ்யமாகும்.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பற்றி வழக்கு விசாரணையில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண் பேட்டி அளித்துள்ளார். அதில், “தேர்தல் பிரமாணப் பத்திரம் என்பது 2004 முதல் அமலில் உள்ளது. ஒரு வேட்பாளர், தனது மற்றும் தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் சொத்து, அசையும் மற்றும் அசையா சொத்துகள் வங்கிக் கணக்குகள், கடன்கள் ஆகியவற்றை முறையாகவும் முழுமையாகவும் தாக்கல் செய்யவேண்டும் என்று சட்டம் உள்ளது. அப்படி ஏதேனும் சொத்துக்களை மறைத்தால், அது வாக்காளர்கள் அனைவரையும் ஏமாற்றுவது என்று பொருள்படும்.

அதன்படி ரவீந்திரநாத் பொறுப்பு வகித்த நிறுவனத்தின் பங்குகளையும், தான் நிர்வகித்து வந்த நிறுவனத்தில் 45 லட்சம் அளவிற்கு பெற்ற சம்பளத்தையும், அவரது தம்பிக்கு கொடுக்க வேண்டிய ரூ. 66 லட்சம் கடனையும், தான் பெற்ற வீட்டுக் கடனையும், சொத்துகளை அடமானம் வைத்து வாங்கிய கடனையும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் காட்டாமல் ரவீந்திரநாத் மறைத்துள்ளார்.  இதில் ஒன்றிரண்டை குறிப்பிட்டு, திமுக-வைச் சேர்ந்த தங்க. தமிழ்ச்செல்வன் எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்தார். அதில், “ஒரு ஆட்சேபணை மனு வந்தால் அதை விசாரித்த பிறகுதான், வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்பதைச் சொல்ல வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அதிகார துஷ்பிரயோகமாக, தேர்தல் அதிகாரி ரவீந்திரநாத்தின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

ஓ.பி. ரவீந்திரநாத் பங்கு வகிக்கும் நிறுவனத்தின் ஆவணங்கள், வருமான வரி பேலன்ஸ் ஷீட்டுகள், சம்பளம் பெற்றதற்கான விவரங்கள் என அரசு காப்பகங்களில் உள்ள ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. தங்க. தமிழ்ச்செல்வனும் நேரில் வந்து சாட்சியம் அளித்தார்.  தேர்தல் நடத்தும் அதிகாரியும், நீதிமன்றத்திலேயே, “தான் இந்த வேட்பு மனுவை சரியாகப் பரிசீலிக்கவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். மேலும், ரவீந்திரநாத் வேட்பு மனுவில் செய்த தவறுகளுக்கான ஆவணங்களையும் தேர்தல் அதிகாரியே தாக்கல் செய்தார்.  இந்த குற்றச்சாட்டுக்களின் மீது ஓ.பி. ரவீந்திரநாத் கிட்டத்தட்ட 6 நாட்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டதில், அவர் மீதான தவறு நிரூபிக்கப்பட்டது. அதனாலேயே அவரது வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

;