tamilnadu

img

மார்க்ஸ் சிலை திறப்பு முதல்வருக்கு எம்.ஏ. பேபி வாழ்த்து!

மார்க்ஸ் சிலை திறப்பு  முதல்வருக்கு எம்.ஏ. பேபி வாழ்த்து!

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், மாமேதை காரல் மார்க்சின் சிலையை நிறுவிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 
“சென்னை, எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காரல் மார்க்ஸ் உருவச்சிலையைத் திறந்து வைத்தது ஒரு முக்கியத்துவமான மற்றும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “சமூகத்தை மாற்றியமைக்கவும், சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறையின் பிடியில் இருந்து மனிதகுலத்தை விடுவிக்கவும் கூடிய ஒரு புரட்சிகரமான தத்துவத்தை மார்க்ஸ் முன்வைத்தார். இந்தப் புரட்சிகர தத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகின் மூன்றில் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றங்களை நாம் கண்டுள்ளோம். இந்தத் தருணத்தில், தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் எங்களது அன்பார்ந்த மற்றும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” என்றும் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.