டி.வி.யில் செய்தி வாசிப்பவர் படிக்காமலே, நம்மை நேராகப் பார்த்து- வாசிப்பது எப்படி?
டி.வி.கேமரா - ஆடி. படுக்கைவசமுள்ள டி.வி. (பிராம்டர்). – இருட்டுப் பகுதி.
பிரதிபலித்தல் – முன் பின் நகர்த்தி.
(படம் - கற்பனையில்…..)
இதற்கு ‘கண்ணாடியில் பிரதிபலிப்பு’ யுக்தி பெரிதும் பயன்படுத்தப்படு கிறது. செய்தி வாசிப்பவர்களின் கண் காமிராவில் லென்சு - பகுதியைப் பார்த்தவாறு இருக்கும். அங்கே ஒரு சிறிய டி.வி.யைப் படுக்கை வசமாக வைத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்தியை அனுப்ப, காமிராவிற்கு முன்னே உள்ள கண்ணாடி வழியாக அது- பிரதிபலிக்கும். இதை செய்தி வாசிப்பவர்கள் படிப்பார்கள். இதனை பிராம்டர் (Prompter) என்பர்.
முன்னே பின்னே நகர்த்தும் வசதியுடன் ஒரு கருவி- வாசிப்பவர்களின் இடது (வலதல்ல) கையில் இருக்கும். இதிலுள்ள ஆச்சர்யம் கண்ணாடியில் பிரதிபலிக்கும் தகவல் -காமிராவில் பதியாது.
(இது போன்று உங்கள் பள்ளிகளில் செய்து காண்பித்துள்ளார்களா?
ஏ.சி.எஸ்.மணி