மதுரை, டிச.22- குழந்தைகள் உரிமை செயற்பாட்டா ளர்களுக்கான மாநில பயிற்சி முகாம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை கே.கே.நகரில் உள்ள நீதிபதி வி.ஆர். கிருஷ் ணய்யர் கம்யூனிட்டி ஹாலில் டிசம்பர் 21 புத னன்று மாநில அமைப்பாளர் என். அமிர்தம் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. கோபிநாத் வர வேற்றுப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
குழந்தைகளுடன் நாம் பழகி அவர்களுக் கான அமைப்பை செயல்படுத்த வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துத்துவா சித்தாந் தத்தை மாணவர்களிடம் பரப்பி வருகிறது. இதற்கு எதிராக கடுமையான போராட்டத்தை நாம் நடத்த வேண்டியுள்ளது. குழந்தைகளை பள்ளி பருவத்திலிருந்து திரட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இன்றைக்கு மாண வர்கள் சாதி அடையாளக் கயிறுகளுடன் பள் ளிக்கு வருகிறார்கள் .அவர்களை எதிர்த்து தலைமை ஆசிரியர் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலை உள்ளது. சாதி அடையாளத்தால் வரும் மாணவர்களை மத அடிப்படையில் ஒன்று திரட்டுவதில் மதவெறியர்களுக்கு சிர மம் ஏற்படாது. இப்படிப்பட்ட அணிதிரட்டலை நாம் தடுக்க வேண்டும். மதவாத சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் போதைப் பழக்கம் அதி கரித்துள்ளது. 7, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி யுள்ளனர். சாக்லேட் வடிவில் கூட போதைப் பொருள் வந்துவிட்டது .இவற்றிலிருந்து மாண வர்களை, இளைஞர்களை நாம் மாற்ற வேண் டும். அவர்களை ஒன்று திரட்ட வேண்டும் .எதிர் காலத்தில் நல்ல தமிழகத்தை,நல்ல தேசத்தை உருவாக்க வேண்டும்.
இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் விதமாக விளம்ப ரங்களை செய்து தங்களது பொருட்களை விற்பனை செய்கிறார்கள். பெற்றோர்களை கவர முடியாது என்று தெரிந்து கொண்ட கார்ப்ப ரேட் நிறுவனங்கள் குழந்தைகள் மூலமாக கவர்வதற்கான வித்தையை கற்று வைத்துள் ளன. எனவே தான் குழந்தைகளுக்கு நல்ல அர சியல் கல்வியை கற்றுக் கொடுக்க வேண் டும். மாணவர் சமூகத்தை சமூகச் சீர்கேடு களில் இருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும். வள்ளலார், வைகுண்டசாமி போன்றோர் சமூக சீர்திருத்த கருத்துக்களை கூறினார்கள். அவர் கள் பின்னால் ஆயிரம் ஆயிரம் மக்கள் திரண்ட னர். அதேபோல் சமூக சீர்திருத்த கருத்துக் களை இன்றைக்கு சிறார்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எம்.ஏ.பேபி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் எம்.ஏ.பேபி பேசியதாவது:
குழந்தைகளுக்கு பாட்டும் நடனமும் முக்கி யமானது.இதை நாம் அவர்களுடன் இணைந்து செய்ய வேண்டும். குழந்தை களின் உணர்வுகளுடன் நாம் ஒன்றிப்போக வேண்டும். மதவெறி அமைப்புகள் குழந்தை களுக்கு வெறுப்பை கற்றுத்தருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துத்துவா மதவெறி சித்தாந்தத்தை பரப்ப விடுதலைப் போராட்ட வீரர்களை, தேசியத் தலைவர்களை அடையா ளங்களாக மாற்ற முயற்சிக்கிறது. இதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த உல கத்தை எப்படி பார்க்க வேண்டும் என்று நம்மைப் போன்ற முற்போக்கு அமைப்புகள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு சமூகத்தைக் கற்றுத் தரு வது, அறிவியல்பூர்வமான சிந்தனையை உரு வாக்குவது என்பது ஜனநாயக இயக்கங்களை கட்டுவதற்கான அடிப்படையான வேலை. இவ்வாறு அவர் கூறினார்.