tamilnadu

img

தமிழகத்தின் நிதி, மொழி, கல்வி உரிமையை நிலைநாட்ட குரல் கொடுப்போம்!

தமிழகத்தின் நிதி, மொழி, கல்வி உரிமையை நிலைநாட்ட குரல் கொடுப்போம்!

திமுக எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம்

திமுக எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூலை 18 -   கடந்த 11 ஆண்டுகளாக தமி ழகத்தை வஞ்சித்து வரும் பாஜக அரசின் வஞ்சகத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி, நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலை நாட்டுவோம் என திமுக மக்க ளவை, மாநிலங்களவை உறுப்பி னர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலை மையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மக்களவை -  மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து ஒன்றிய அரசு மௌனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய ரயில் திட்டங்களுக்கு நிதியளிக்கா மல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப் புற மக்களுக்கான மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட  நிதியை முறையாக வழங்காமல்  தாமதிப்பது, மாநிலத்தின் நிதி  தன்னாட்சிக்கு ஆபத்து விளை விக்கும் வகையில் தமிழ்நாட்டிற் கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து,  நமக்கான உரிமைக் குரலை ஓங்கி  ஒலிப்பது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கொடுக்காமல் தட்டிக் கழிப்பது, வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கோடிக் கணக்கானவர்களின் வாக்குரி மையைப் பறித்து ஜனநாயகத்தின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் நோக்கில் தன்னாட்சிப் பெற்ற தேர்தல் ஆணையத்தைப் பயன் படுத்துவது, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது  செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை - எளிய மக்க ளைப் பாதிக்கும் ரயில் கட்டண  உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளும் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.