tamilnadu

img

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் காலமானார்

லக்னோ, அக். 10 - உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள்  முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறு வனத் தலைவருமான முலாயம் சிங் யாதவ்  திங்கட்கிழமையன்று காலமானார். அவ ருக்கு வயது 82.  உடல்நலக்குறைவு காரணமாக குர்கானிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முலாயம் சிங், அக்டோ பர் 2-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி முலாயம் சிங் யாதவ் காலமானார்.

மல்யுத்த வீரர்

1939-ஆம் ஆண்டில் எடாவா மாவட்டம்  சைபை கிராமத்தில் நவம்பர் 22-ஆம் தேதி பிறந்த முலாயம் சிங் யாதவ், தனது  சிறு வயதில் மல்யுத்த வீரராக வலம் வந்தார். பின்னாளில், ராம் மனோகர் லோகியாவின் சோசலிச சித்தாந்த கருத்து களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட முலாயம் சிங்,  அப்போது முதல் அரசியலில் ஆர்வம் காட்டத் துவங்கினார். சன்யுக்தா சோச லிஸ்ட் கட்சியில் இணைந்த முலாயம்  சிங். 1967-ஆம் ஆண்டு ஜஸ்வந்த் நகர் தொகுதியிலிருந்து முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டார். 1975-ஆம் ஆண்டில், எமர்ஜென்சியின் போது, 19 மாதங்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று முறை முதல்வர்

1977-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் ஜனதாதள அரசு அமைந்த போது முலாயம் சிங் யாதவ் அமைச்சரானார். இந்த  வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட முலாயம் சிங் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். முக்கியமாக, கூட்டுறவு நிறுவனங்களில் பட்டியல் வகுப்பினருக்கு இட ஒதுக் கீட்டைக் கொண்டு வந்தார். இதேபோல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி னார். 1989-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஜனதா தள ஆட்சி அமைந்தபோது, முதல்முறையாக உத்தரப் பிரதேசத்தின் முதல்வரானார். 1990 காலகட்டத்தில் பாஜக-வின் மதவெறி அரசியல் காரணமாக உ.பி. அரசியலில் குழப்பங்கள் ஏற்பட்டன. முலாயம் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றது.  இந்தப் பின்னணியில், 1992-இல் சமாஜ்வாதி கட்சியை தொடங்கிய முலாயம் சிங், அடுத்த ஓராண்டிலேயே மீண்டும் உ.பி. ஆட்சியை பிடித்தார். இந்தமுறை அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்தது. இந்த ஆட்சியும் இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்தது.  1996-ஆம் ஆண்டு மத்தியில் ஜனதா தளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தபோது, முலா யம் சிங் யாதவின் பெயர் பிரதமர் பத விக்கு அடிபட்டது. ஆனால் அதுவும்  கைகூடவில்லை. மாறாக, தேவ கவுடா அரசில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்த பின்னணியில், மீண்டும் மாநில அரசிய லில் கவனம் செலுத்திய முலாயம் சிங், 2003-இல் மீண்டும் உத்தரப் பிரதேச முதல்  வரானார். பின்னர் முதுமை, உடல்நலப்  பிரச்சனைகள் காரணமாக ஆட்சியையும்,  கட்சியையும் தனது மகன் அகிலேஷிடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையிலேயே உடல்நலம் பாதிக்  கப்பட்டு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பல னின்றி திங்களன்று காலமானார்.

உ.பி. அரசு மூன்று நாட்கள் துக்கம்

முலாயம் சிங்கின் மறைவு உ.பி. மக்  களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள் ளது.  உ.பி. மக்களால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்டவரும், இறுதி வரை சோசலிசம், மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியோடு இருந்தவரு மான முலாயம் சிங்-கின் மறைவுக்கு குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரத மர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் வெளியிட்டுள்ளனர். முலாயம் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனு சரிக்கப்படும் என்றும், மேலும் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்ச்சி கள் நடைபெறும் என்றும் முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இன்று இறுதி நிகழ்ச்சி

முலாயம் சிங்கின் உடல், அவரது சொந்த ஊரான சைபாய் பகுதியில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு செவ்வாயன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  இதையொட்டி அரசியல் கட்சித் தலை வர்கள் பலரும் முலாயம் சிங்கின் சொந்தக் கிராமத்திற்கு வரவுள்ளதால், சைபாய் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்  பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 



 

 

;