tamilnadu

img

மறைந்த தோழர் வி.சேகர் படத்திறப்பு

மறைந்த தோழர் வி.சேகர் படத்திறப்பு

விழுப்புரம், அக்.15- விழுப்புரத்தில் கடந்த செப்.29-ல் மறைந்த தோழர்.வி.சேகர்  படத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் தலைமையில் செவ்வாயன்று (அக்.14)நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் கலந்து கொண்டு மறைந்த தோழர் வி.சேகரின் படத்தை திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், என்எல்சி முன்னாள் சிஐடியு தலைவர் ஏ.வேல்முருகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.வீரமணி, ஓய்வு பெற்றோர் சங்க ஏ.சகாதேவன், விதொச எஸ்.அபிமண்ணன், என்எல்சி ஓய்வு தாமரைக்குளம் ஆர்.பிரேம்குமார்,கே.சுந்தர் மற்றும் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் என்.மேகநாதன் நன்றி கூறினார்.