tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை  அரசு ஊழியராக்க வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, செப்.17- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 7 வது மாவட்ட மாநாடு ஊத்தங்கரை நிரஞ்சனா நெருலா நினைவு அரங்கில் நடைபெற்றது.   மாநில துணைத் தலைவர் கே. கோவிந்தம்மாள் தலைமை தாங்கி மாநாட்டை துவக்கி வைத்தார்.  மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி வர வேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் மஞ்சுளா அஞ்சலி வாசித்தார். மாவட்ட செயலாளர் எம்.தேவி வேலை அறிக்கையையும், பொருளாளர் சுஜாதா வரவு செலவு அறிக்கையையும், சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் என் ஸ்ரீதர் வாழ்த்திப் பேசினார். தீர்மானங்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடையாக ஊழியருக்கு 10 லட்சமும், உதவியாளருக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும், அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் 5 ஜி செல்போன், சிம் கார்டு வழங்க வேண்டும், 1993 இல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழி யர்களுக்கு மேற்பார்வையாளராக நிலை 2 பதவி உயர்வை வழங்க வேண்டும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள குறு மைய பணியாளர்களுக்கும் உதவி யாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக தேவி, செயலாளராக சுஜாதா, பொருளாளராக மஞ்சு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.