tamilnadu

img

புதிய ரேசன் கடை திறப்பு

புதிய ரேசன் கடை திறப்பு

பாபநாசம், அக். 11-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே, உமையாள்புரத்தில் பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்ததுடன், பயனாளிகளுக்கு ரேசன் பொருள்களை வழங்கினார்.  இதில் தி.மு.க பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலாளர் தாமரைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா, பெருமாள் கோவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் வன்னியடி ராஜேந்திரன், ஓலைப்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் விஜி, கூட்டுறவு சங்க பொறுப்பாளர் கலியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.