tamilnadu

img

காமராசர் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

மதுரை:
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் சாத்தூர், அருப்புக்கோட்டை, ஆண்டிபட்டி,கோட்டூர், வேடசந்தூர், திருமங்கலம் ஆகிய இடங்களில் உறுப்புக் கல்லூரிகளும், மதுரைகாமராசர் பல்கலைக்கழக கல்லூரியும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில்400-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்களுக்கு கோடை விடுமுறைக்காலமான மே மாதம் தவிர்த்து இதர பதினோருமாதங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.கொரோனா பொது முடக்கத்தையொட்டி, மார்ச் 16-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல்ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் மே,ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாது என்று பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைக்கழக உறுப்புக்
கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவிரிவுரையாளர்கள் காமராசர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து துணைவேந்தர் மு.கிருஷ்ணன், பதிவாளர் வசந்தா ஆகியோர் கௌரவ விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவார காலத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.