tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கமலும், நானும் சேர்ந்து  படம் பண்ண வேண்டும்: ரஜினி

சென்னை, செப். 17 - கமலும், நானும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என ஆசை உள்ளது. கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம் என சென்னை விமான நிலையத்தில் நடிகர்  ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை (செப்.17) சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  ராஜ்கமல், ரெட் ஜெயிண்ட் சேர்ந்து, ஒரு படம் பண்ண போகிறோம். அந்த படத்திற்கு இன்னும் இயக்கு நர் முடிவாகவில்லை. கமலும், நானும் சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம்” என்றார். கோவை விமான நிலையத்துக்கு சென்றதும் நிரு பர்களிடம் ரஜினி கூறுகையில், ‘ஜெயிலர்- 2’ படப் பிடிப்புக்கு கேரளா செல்வதற்காக வந்துள்ளேன். 6 நாள்  படப்பிடிப்பு நடக்க உள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதம்  படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார். திரைக் கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?  என்ற நிருபர்களின் கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்றும்  தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயிலில்  கூடுதலாக 4 பெட்டிகள்  

சென்னை, செப். 17 - நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்  சேவை தொடங்கப்பட்ட போது 8 பெட்டிகளுடன் இயங்கி யது. அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்ட  போட்டிகளாகும். குறைந்த நேரத்தில் சென்னை செல்வ தால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன. 16 பெட்டிகளு டன் இயங்கிய நிலையில் வந்தே பாரத் ரயிலுக்கான காத்திருப்பு பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. எனவே  வரும் 24ஆம் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள் கூடுத லாக இணைக்கப்பட உள்ளன. அன்று முதல் இந்த ரயில்  மொத்தம் 20 பெட்டிகளுடன் இயங்கும். இதன் மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம். தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1128 பயணிகள் பயணித்து வருகின்றனர். வரும் 24ஆம்  தேதி முதல் 1,440 பயணிகள் பயணம் செய்ய முடியும்.  வரும் 24ஆம் தேதி முதல் இணைக்கப்படும் 20 பெட்டி களில் 2 சிறப்பு இருக்கை வசதி பெட்டிகள் உள்ளன என  தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

‘பெரியார்தான் காரணம்

சென்னை: “ஒடுக்கப் பட்ட மக்கள், பட்டியலின மக்கள், கீழ்சாதி எனச்  சொல்லும் அத்தனை சாதி யினரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகுவதற்கு காரணமான ஒரே போராளி தந்தை பெரி யார்தான்” என்று. தான் வரைந்த பெரியாரின் ஓவியத்தை குறிப்பிட்டு பள்ளி மாணவர்கள் மத்தி யில் திரைக் கலைஞர் சிவக்குமார் பேசியுள்ளார்.

ராமதாஸ் தரப்பு புகார்

சென்னை: தலைவர் பதவியில் இல்லாத ஒரு வரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுங்கியிருப்பது ஏற்புடை யதல்ல எனவும், உரிய  விசாரணை அடிப்ப டைக்கு பிறகு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வும் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ராம தாஸ் தரப்பு புகார் அளித் துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரை, பாமக எம்.எல்.ஏ. அருள்,  பொதுச் செயலாளர் முரளி  சங்கர் ஆகியோர் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

‘முகமூடியார் பழனிசாமி’

சென்னை: 23 ஆம்  ‘புலிக்கேசி’ பட பாணியில்  இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை ‘முகமூடி யார்’ பழனிசாமி என்று அழைக்க வேண்டும் என்று,  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர் சித்துள்ளார்.