திண்டுக்கல், ஜுலை 15- கோவில்,மதத்தைக் காட்டி யும் மதவெறியை கிளப்பியும் மக்களின் ஆதரவை இனியும் பாஜகவால் பெற முடியாது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். பழனி முருகன் கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக ஜூலை 14 வெள்ளி யன்று பழனியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநி லச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பொதுவாக அரசு ஒரு திட்டத்திற்கு நிலம் எடுக்கும் போது அந்த விவசாயிகளின் ஒப்பு தலை பெற வேண்டும். நாங்கள் சிப்காட் வேண்டாம் என்று சொல்லவில்லை. தொழிற் சாலைகள் வளர வேண்டும். தொழிற்சாலை கள் வளர்ந்தால்தான் இந்த நாட்டின் பொரு ளாதார கட்டமைப்பு வளரும். வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும் என்பது மார்க்சியம் ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கை. ஆனால் பழனிக்கு வந்த எச்.ராஜா என்ன சொல்கிறார்? கோசாலை அருகே சிப்காட் வரக்கூடாது என்கிறார். பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைக் குடும்பத்தில் படித்தவர்கள் வேலைக்கு போ காமல் இவர்கள் நடத்தும் கோசாலைக்கு வந்து ஆடு மாடு மேய்க்க வேண்டும் என்று சொல்கிறார். எந்த பிரச்சனையை எடுத்தா லும் வன்முறை செய்கிற காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பக்தர்கள் கோவிலுக்கும் போவார்கள். அதே சமயத்தில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளை ஆதரிக்கிறார்கள். பெண்கள், பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைக்கிற பாஜக எப்படி இந்துக்க ளின் பாதுகாவலராக இருக்க முடியும்?. பழனி கோவிலில் ரூ. 3 ஆயிரம் கோடி பணம் இருப்பு வைத்திருக்கிறார்கள். அது பாஜக தலைவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. கோவில் வெறும் வழிபாட்டு நிலையம் மட்டும் அல்ல. அது ஒரு பண்பாட்டு மையமாக உள்ளது. அது ஒரு வரலாற்று மையமாக, கலை மையமாக உள்ளது. பழனிமுருகன் கோவில் நிர்வா கம் சார்பாக ஏற்கனவே 2 கல்லூ ரிகள் நடக்கின்றன. இப்போது இன்னொரு கல்லூரிக்கு அனுமதி அளித்துள்ளனர். திமுக ஆட்சி யில் தற்போது 6 கலைக்கல்லூரி களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. கல்லூரிகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வருமானத்தைக் கொண்டு இந்த பகுதியில் வசிக்கும் இளம் தலைமுறையினருக்கு கல்லூரி கள் கட்டப்படுகின்றன. இது ஒரு சமூக புரட்சி. பாராட்ட வேண்டிய நல்ல விசயம். உண்மையிலேயே பாஜகவினர் நல்ல பண்புள்ளவர்களாக இருந்தால் இதை பாராட்டியிருக்க வேண்டும். அவர்களுக்கு மனசு இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க எப்படியாவது மதவெறியை கிளப்பி பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுவிடலாம் என்று கருகிறார்கள். அது நிச்சயமாக நடக்காது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அதிக மாக பாதிக்கப்படுகிறவர்கள் 84 விழுக்காடு இந்து மக்கள்தான். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னீர்களே. ஆனால் இந்த 9 ஆண்டுகளில் பல கோடி பேர்களின் வேலைவாய்ப்பை பறித்து வேலையில்லா பட்டாளமாக மாற்றியிருக்கிறீர்கள். இந்த நாட்டின் உழைப்பாளி மக்களை வதைக்கிறது மோடி அரசு. கோவிலை காரணம் காட்டி, மதத்தைக் காரணம் காட்டி, நாட்டு மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப்போகிறீர்கள். நாட்டின் மதச் சார்பின்மையை பாதுகாக்க, ஆல யங்களை பாதுகாக்க, இந்திய தேசத்தை பாதுகாக்க, நாட்டில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அந்த ஒன்றுபட்ட பயணத்தை நாம் தொடருவோம். பழனி முருகன் ஆலயத்தை பாதுகாத்திட நாம் எல்லோரும் அணிதிரள்வோம். இவ்வாறு அவர் பேசினார். (நநி)